திருச்செந்தூர் முருகன் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம்

45

திருச்செந்தூர், ஜன. 16
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிப்பட்டனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. காலை 7 மணிக்கு சுவாமி அஸ்திர தேவர் கடலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சண்முகவிலாச மண்டபத்தில் அஸ்திரதேவருக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தன.
தை அமாவாசையை முன்னிட்டு தமிழகம் முழுவதிலிருந்தும் திருச்செந்தூருக்கு வந்திருந்த பக்தர்கள் அதிகாலையில் கடலிலும், நாழிகிணற்றிலும் புனித நீராடினர். மேலும் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிப்பட்டனர். கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருத்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் பாரதி ஆகியோர் செய்திருந்தனர்.

LEAVE A REPLY