வித்யாசாகர் சிலையை பா.ஜ.க.வினர் உடைக்கும் வீடியோ; திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டது

2
வித்யாசாகர்
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் பா.ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா பேரணியில் வன்முறை வெடித்ததில் தத்துவ மேதையும், வங்காள மறுமலர்ச்சிக்கு காரணமானவருமான இஷ்வார் சந்திரா வித்யாசாகரின் மார்பளவு சிலையும் உடைக்கப்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இதற்கு கண்டனம் தெரிவித்தது.
திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பார்த்தா சட்டர்ஜி நேற்று இந்த சிலை உடைப்பு காட்சி அடங்கிய வீடியோவை பத்திரிகையாளர்கள் முன்பு வெளியிட்டார். அதில், காவி நிற டி-சர்ட் அணிந்த பா.ஜனதா தொண்டர்கள் அந்த சிலையை சுக்குநூறாக உடைக்கும் காட்சி பதிவாகி இருந்தது. சட்டர்ஜி கூறும்போது, இதுதான் பா.ஜனதாவின் கலாசாரம். அமித்ஷாவும், அவரது கட்சியினரும் சிலை உடைப்பு வி‌ஷயத்தில் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும் என்றார்.

LEAVE A REPLY