யாரை வெற்றி பெற செய்ய போகிறது 1000 ? – பல பரீட்சை பகுதியில் பல்லாங்குழி விளையாட்டு !

16

மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் பல பரீட்சையில் சூரியனும் பச்சை இலையும் வெகுமதி பெட்டியும் ஈடுபட்டிருக்கிறது. இதில் ஒன்றை இன்றொன்று வீழ்த்த வியூகம் அமைத்து செயல்பட்டு வருகின்றன. எப்படியும் வென்றாக வேண்டும் அப்போதுதான் அதிகாரத்தை தொடரமுடியும் என பச்சை இலை தரப்பு வரிந்து கட்டிக் கொண்டிருக்கிறது. அதற்காக ஜனநாயக எஜமானரை பிடிக்க, ’ஆயிரம்’ வலையை விரித்து வருகிறது.

இதற்கு போட்டியாக சூரிய திசையும் ‘ஆயிரம்’ வழியை தேர்ந்தெடுத்திருக்கிறது. அதன் மூலம் ஜனநாயக எஜமானரை பிடிக்க முடியும் என அதுவும் நம்புகிறது. இதற்கெல்லாம் மேலாக பச்சை இலையை காய்ந்த இலையாக ஆக்கியே தீரவேண்டும் என வெகுமதி தரப்பு அதே , ஆயிரம்’ வழியை தேர்ந்தெடுத்திருக்கிறது.

ஆக மூன்று பெரிய புயல்களும் ‘ஆயிரம்’ கி.மீ வேகத்தில் வேகமாக பாய்ந்து வீசிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு புயலும் அவரவர் ஆதரவு எஜமானர்களை முதலில் தக்க வைக்கவும். அடுத்த கட்டமாக கூடுதல் வேக புயலால் அடுத்தவர்களையும் இழுக்கவும் முடிவு செய்து வேலை செய்து வருகிறது என்கிறார்கள்.

ஆக பல பரீட்சை நடக்க கூடிய பகுதியில் புயல் ’ஆயிரம்’ கி.மீ வேகத்தில் வேகமாக வீசிக் கொண்டிருக்கிறது. இந்த ’ஆயிரம்’ வேக புயல் யாரை வெற்றி பெற செய்ய போகிறதோ தெரியவில்லை. இன்னும் சில நாட்களில் அதற்கான ரிசல்ட்யை பார்க்கலாம். அதுவரை காத்திருப்போம் !

LEAVE A REPLY