நாசரேத் தூய யோவான் பேராலய அசன கமிட்டி தலைவர் தேர்தல்!

129
நாசரேத்

நாசரேத் தூய யோவான் பேராலய அசனக் கமிட்டி  தலைவர் தேர்தலில் அ.செல்வின் குரல் வாக்கெடுப்பு மூலம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாசரேத் தூய  யோவான் பேராலய அசனக் கமிட்டி நிர்வாகிகள் தேர்தல் நாசரேத் கஸ்பா  துவக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தலைவராக பணியாற்றிய செல்லத்துரை தனது பதவியை ராஜினாமா செய்ததால் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டது.   நாசரேத் தூய யோவான் பேராலய அசனக் கமிட்டி  தலைவர் தேர்தலில் அ.செல்வின் குரல் வாக்கெடுப்பு மூலம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில்  தேர்ந் தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக் கொண்டார்.அவருக்கு செயலாளர் செல் லக்குமார்,பொருளாளர் ஆர்.லேவி அசோக் சுந்தர்ராஜ், சேகர செயலாளர் ஜெ.டி.எலியேசர், சேகர பொருளாளர் டி.மர்காஷிஸ் தேவதாஸ் மற்றும் முன்னாள் சேகர செயலாளர் ஆனந்தராஜ், சேகர கமிட்டி அங்கத்தினர் கள், அசனக் கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

LEAVE A REPLY