இயந்திர மீன்பிடிப் படகு ஒட்டுநர்களுக்கான எஞ்சின் பராமரிப்பு மற்றும் கடல் பாதுகாப்பு இயந்திர மீன்பிடிப் படகு ஒட்டுநர்களுக்கான எஞ்சின் பராமரிப்பு மற்றும் கடல் பாதுகாப்பு!

2

”இயந்திர மீன்பிடிப் படகு ஒட்டுநர்களுக்கான எஞ்சின் பராமரிப்பு மற்றும் கடல் பாதுகாப்பு” என்ற ஒரு வார கால பயிற்சியின் நிறைவு விழாவில் பயிற்சி பெற்றவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. முரளி ரம்பா இ.கா.ப அவர்கள் சான்றிதழ் வழங்கினார்.

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் இயந்திர மீன்பிடிப் படகு ஒட்டுநர்களுக்கான எஞ்சின் பராமரிப்பு மற்றும் கடல் பாதுகாப்பு” என்ற ஒரு வார காலப் பயிற்சியை இன்று (14.05.2019) நிறைவு பெற்றது. இப்பயிற்சியில் 25 விசைப்படகு மீனவர்கள் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சி நிறைவு விழாவில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. முரளி ரம்பா இ.கா.ப அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

இயந்திர
அப்போது அவர் தனது சிறப்புரையில் மீன்பிடிப் படகுகளில் ஏற்படும் பிரச்சனைகளை சுலபமாக தீர்ப்பதற்கு இந்த பயிற்சி மீனவர்களுக்கு மிகவும் உறுதுணையாக அமையும் என்பது கூறினார்.மேலும் அவர் கூறுகையில் இயற்கை பேரிடர் பற்றி விழிப்புணர்வு மீனவர்களுக்கு அவசியம் என்றும் இதுபோன்ற பயிற்சிகள் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் வலியுறுத்திக் கூறினார். கடல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மீனவர்களுக்கு மிகவும் அவசியமானது என்றும் வலியுறுத்தினார்.
கல்லூரியின் மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் கடல் சார் பயிற்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் நீ. நீதிச்செல்வன் வரவேற்புரையும் மீன்வளக் கல்லூரியின் முதல்வர்(பொறுப்பு) முனைவர் ப. வேலாயுதம் தலைமையுறையும் மீன்வளப் பொறியியல் துறையின் உதவிப் பேராசிரியர் திரு. த.இரவிக்குமார் அவர்கள் நன்றியுரையும் ஆற்றினார்கள்.

LEAVE A REPLY