தருவைக்குளத்தில் வாக்கு சேகரிப்பு!!

2
தருவைக்குளத்தில் மீனவர்கள் பயன்பெறும் வகையில் மீன் இறங்கு தளம் விரிவாக்கம் செய்யப்பட்டு,    தூண்டில் வளைவு அமைப்பதுடன், மக்களுக்கு தினம்தோறும் குடிநீர் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக மாநில இளைஞர் அணி துணை செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் உறுதி அளித்துள்ளார்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியம் தருவைகுளம், வெள்ளப்பட்டி பகுதி தேர்தல் பொறுப்பாளரான திமுக மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல்  தலைமையில் இளைஞர் அணியினர் கழக வெற்றி வேட்பாளர் திரு. சி.சண்முகையா அவர்களுக்கு இன்று (14.05.2019) தருவைக்குளத்தில் வீடு வீடாக சென்று பொதுமக்களை  சந்தித்து வாக்கு சேகரித்தனர்.
வாக்கு சேகரிப்பின் போது,கழக மாநில  இளைஞர் அணி துணை செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் பொதுமக்களிடம் கூறியதாவது, உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறிடவும், மாணவர்களின் கல்விக்கடன் மற்றும் நீட் தேர்வை ரத்து செய்திடவும் கழக வெற்றி வேட்பாளர்  சண்முகையாவை வெற்றி பெற செய்திடுங்கள்.
நாங்கள் வெற்றி பெற்றவுடன்,   மீனவ பெருங்குடி மக்கள் பயன்பெறும் வகையில் தருவைகுளத்தில் ”மீன் இறங்கு தளம்” விரிவாக்கம் செய்யப்பட்டு, தூண்டில்வளைவு அமைத்து தரப்படும்., அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு 24மணிநேரமும் செயல்பட வழிவகை செய்யப்படும்.
சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தினை முழுமையாக செயல்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்., தருவைக்குளம் பகுதி வழியாக செல்லும் வல்லநாடு கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்தும் கூடுதலாக தருவைக்குளம் மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை உடனே எடுக்கப்படும்., குடிநீர் பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, குடிநீர் தட்டுப்பாட்டுக்கு நிரத்தரமாக முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
தருவைக்குளத்திலுள்ள இரண்டு கண்மாய்களும், அதற்கு தண்ணீர் வரும் வரத்து கால்வாய்களும் தூர் வாரி சீரமைக்கப்பட்டு, அதிகப்படியான மழைநீர் சேகரிக்கப்பட்டு விவசாயத் தேவைகளுக்கு பயன்படுத்தப்படும், நிலத்தடிநீர் மேம்படவும் வழிவகை செய்யப்படும்., முத்தமிழ் அறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களால் தருவைக்குளத்தில் ஏற்கனவே கட்டிக்கொடுக்கப்பட்டு, பழுதான நிலையிலுள்ள 40வீடுகள் மற்றும் 125வீடுகள் மீனவ கூட்டுறவு சங்கத்தின் மூலமாக புதியதாக அதே இடத்தில் கட்டிக்கொடுக்கப்படும் என்று உறுதி அளித்து பேசினார்.
வாக்கு சேகரிப்பின் போது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் வழக்கறிஞர் சுரேஷ்குமார், தூத்துக்குடி மாநகர முன்னாள்  பகுதி செயலாளர் P.பென்னி, திமுக
நிர்வாகிகள் அந்தோணி பன்னீர்தாஸ், நிக்குலாஸ் டெனிஸ்டன், மிக்கேல் பாஸ்கர், பிரசன்னா, அந்தோணி தயாளன், இளைஞர் அணி தனபால், பால்துரை, முத்தரசன், விமல்ஜி மற்றும் இளைஞர் அணியினர், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

LEAVE A REPLY