வாக்காளர்கள் பயமின்றி வாக்களிக்க பலத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

2

வருகிற 19.05.2019 அன்று நடைபெறவுள்ள ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தேர்தல் பார்வையாளர் (பொது) திரு. சுரேஷ்குமார் சர்மா இ.ஆ.ப. மற்றம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. முரளி ரம்பா இ.கா.ப ஆகியோர் தலைமையில் இன்று (14.05.2019) காலை 10.00 மணியளவில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் ஆயுதப்படையினர் மற்றும் தூத்துக்குடி மதுவிலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. வேதரத்தினம் தூத்துக்குடி ஊரக துணை காவல்

கண்காணிப்பாளர் திரு. முத்தமிழ் ஸ்ரீவைகுண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சகாய ஜோஸ் காவல் ஆய்வாளர் புதுக்கோட்டை திரு. திருமலை உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் உட்பட சுமார் 500 பேர் கொண்ட காவல்துறை கொடி அணிவகுப்பு ஊர்வலம் புதுக்கோட்டை தெய்வசெயல்புரம் வல்லநாடு மற்றும் முறப்பநாடு ஆகிய பகுதிகளில் முக்கிய வீதிகளில் நடைபெற்றது. வாக்காளர்கள் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிக்கவேண்டும் என்று மாவட்ட காவல் கண்கணரிப்பாளர் திரு. முரளி ரம்பா இ.கா.ப அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY