பா.ஜ.கவுடனும் தி.மு.க பேச்சு வார்த்தை நடத்துகிறது – தூத்துக்குடியில் தமிழிசை பரபரப்பு பேட்டி!

21

பா.ஜ.கவுடனும் தி.மு.க பேச்சு வார்த்தை நடத்துகிறது என்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்தார்.

தமிழிசை, ‘’ஏற்கனவே நடந்த 18 தொகுதிகளிலும் இப்போது நடக்க இருக்கிற 4 தொகுதிகளிலும் அ.தி.மு.க நிச்சயமாக வெற்றி பெறும் சூழ்நிலைதான் நிலவுகிறது. இதனால் எதிர் கட்சிகள் மிகுந்த பதற்றத்தோடு இருக்கிறார்கள். நேற்று சந்திரசேகரராவ் , ஸ்டாலினை பார்த்திருக்கிறார். அவர்கள் சந்திப்பை வைத்து எதோ அதிமுக, பாஜக வில் குழப்பம் இருப்பதாக பத்திரிக்கைகள் எழுதியிருக்கிறார்கள். நாங்க எந்த குழப்பத்திலும் இல்லை. ஸ்டாலின் குழப்பத்தில் இருக்கிறார்.

அவர்களின் பேச்சு வார்த்தைக்கு பிறகு ஸ்டாலின் பத்திரிக்கையாளர்களை சந்திக்க வில்லை. அப்படி சந்தித்திருந்தால், ஏற்கனவே நாங்கள் ராகுலை முன்னிருத்திவிட்டோம் என்று சொல்ல வேண்டியது வந்திருக்கும். மேலும் மேற்கு வங்களத்துக்கு போனால் அதை பற்றி பேசமாட்டேன். சந்திரசேகரராஜ் முன்னால் இருந்தால் அது பற்றி பேசவே மாட்டேன் என்று பத்திரிக்கையாளர்களிடம் சொல்ல வேண்டியது வந்திருக்கும். அதனால்தான் பத்திரிக்கையாளர்களை அவர் சந்திக்க வில்லை.

எங்க கூட்டணியில் எந்த குழப்பமும் பதற்றமும் இல்லை ஏன் என்றால் வெற்றி பெற போவது நாங்கள்தான். அவர்களின் சந்திப்பு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று நான் சொன்னதற்கு, சகோதரர் ஸ்டாலின், தமிழிசைதான் தாகத்தில் இருக்கிறார் என்று சொல்லியிருக்கிறார். தாமரை என்றைக்கும் தண்னீரில்தான் இருக்கும் அதுக்கு தாகமே கிடையாது. சூரியன் சுட்டேரித்தால்தான் தாகம் வரும்.

ஸ்டாலின்தான் பதவி பசியோடே இருந்து வருகிறார். தூத்துக்குடிக்கு வந்தால் பதனீர் கொடுப்பார்களே தவிர பதவி கொடுக்க மாட்டார்கள். இந்நிலையில் அவர் மீண்டும் தூத்துக்குடிக்கு வந்திருக்கிறார். அவர் வாகனத்தில் சோதனை நடந்ததையே பெரிய பரபரப்பாக ஆக்கப்பார்க்கிறார்கள்.

அமிக்‌ஷா வாகனம், என்னுடைய வாகனம் என நிறையபேருடைய வாகனங்கள் சோதனை செய்யப்பட்டிருக்கிறது. மோடி வாகனம் கூட சோதனை செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு இவர்கள் ஏன் பதற்றம் அடைகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த நாட்டேலேயே ஒரு தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்றால் அதற்கு காரணம் தி.மு.க வேட்பாளர். அவர் அந்த கட்சியின் பொருளாளர்.

இந்த வரலாறு இருக்கும் போது சோதனைகள் அதிகமாக இருக்கத்தான் செய்யும். தி.மு.க பணம் வைத்திருந்தது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா முழுவதும் இவர்கள் புகழ் பேசப்பட்டு வருகிறது. இந்தநிலையில்தான் தி.மு.க இருக்கிறது. எனவே அதிமுக கூட்டணி எளிதில் வெற்றி பெறும்.

அண்ணன் ஸ்டாலின் இன்னும் கொஞ்ச நாள்கள் கனவு கண்டுகொண்டே இருக்கட்டு. 23-ம் தேதி ஆட்சிமாற்றம் என்று வரும் என்று அவர் கனவு கண்டு கொண்டிருக்கிறார். தற்போதுள்ள அரசு ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. நான் நினைத்தால் முதலமைச்சராக ஆகியிருக்கலாம் என்றார். இவரோட ஒரு சின்ன ஆசைக்கே 22 தொகுதியில் இடைத்தேர்தல் வந்திருச்சு. இப்படி பெரியதாக ஆசைப்பட்டால் தமிழகம் தாங்காது.

எனவே இப்போதைக்கு மத்தியிலும் மாநிலத்திலும் ஒரு நிலையான, சாமான்யமக்களின் ஆட்சி வரவேண்டும். அது மத்தியில் பாஜக, மாநிலத்தில் அதிமுகதான். கமலஹாசன், அவர் சொன்ன கருத்துக்கு அவர் முதலில் மன்னிப்பு கேட்டு அவர் பதவி விழகவேண்டும்.

கமல் கட்சியின் அங்கிகாரம் ரத்து செய்யப்பட வேண்டும் அவர்களின் தேர்தல் பரப்புரை முடக்கப்பட வேண்டும். தேர்தல் விதிமுறையை மீறி அங்கே இந்த கருத்தை சொல்லி விச விதையை விதைத்திருக்கிறார் கமல். தேர்தல் அமைதியாக நடந்து வருகிறதே. அதை எந்தவித்திலாவது பதற்றம் அடைய செய்ய வேண்டும் என்று சிலர் இவ்வாறு பேசிவருகிறார்கள்.

பேசிய தவறு என்று அந்த கட்சியினர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பேசியது சரிதான் என்று பேசியதை நியாயப்படுத்த முயன்றால் அவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் மட்டுமல்ல, தூத்துக்குடியிலும் தாமரைதான் மலரும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. அதுபோலவே ஓட்டப்பிடாரம்,விளாத்திகுளம் ஆகிய இடைத்தேர்தலிலும் அதிமுகவே வலுப்பெறும் எந்த சந்தேகமும் இல்லை. தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரையில் அதிமுக, பாஜக அலையே வீசுகிறது’’ என்றவரிடம், அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது ஸ்டாலின் பாஜகவுடனும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் என்கிறாரே என்று கேட்டனர். அதற்கு தமிழிசை, ‘’உண்மைதான் அது’’ என்று சொல்லி பலமாக சிரித்தார்.

மேலும் அவர், ‘’ஒரு பக்கம் ராகுல் இன்னொரு பக்கம் சந்திரசேகரராவ் இன்னொரு மக்கம் மோடி. திமுகதான் நிறம் மாறும் என எல்லாருக்குமே தெரியுமே’’ என்றவரிடம், ’யார் மூலமாக அப்படி பேச்சுவார்த்தை நடக்கிறது’ என்று கேட்டதற்கு, ’யார் மூலமாவது பேசுவார்கள், பேசிக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவுதான். ஸ்டாலின் பதவிக்காக வீடுமாறுவதாக சொல்லப்படுகிறதே என்று கேட்டனர்.

அதற்கு தமிழிசை, ‘’25 வருஷம் கழித்து அவருக்கு ஜனாதிபதி மாளிகை காத்திருக்கிறது. இப்போ எதுக்கு அவர் வீடு பார்க்கனும். மாநில தலைவர் என்பதால் உங்கள் மூலமாக பேச்சு நடத்துகிறார்களோ’ என்று கேட்டனர். அதற்கு அவர், ‘’இல்லை இல்லை அதுக்கெல்லாம் வேறு வழியில் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சந்திரசேகராவ்வுடன் பேசிய பிறகு, மூன்றாவது அணிக்கு வாய்ப்பு இருக்கிறதா என்று ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர், மறுக்கவில்லை. 23 ம் தேதிக்கு பிறகு சொல்றேன் என்றாரே’ என்று கேட்டனர், அதற்கு தமிழிசை, ‘’அதுக்குத்தான் சொல்றேன். அவர் அதை மறுக்கவில்லை. ஒரு புறம் ராகுலிடம் பேசுகிறார். இன்னொருபுறம் சந்திரசேகரராவுடன் பேசுகிறார். மற்றொருபுறம் பா.ஜ.கவுடன் பேசுகிறார். எனவே ஸ்டாலின் நிறம் மாறும் தலைவராக இருக்கிறார்’’ என்றார்.

LEAVE A REPLY