’’கிட்னி பாதிக்கிற தண்ணீரைத்தான் குடிக்கிறோம். ஆற்று தண்ணீருக்கு ஏற்பாடு செய்யுங்க’’ ஸ்டாலினிடம் கூட்டாம்புளி மக்கள் கோரிக்கை

17

’’கிட்னி பாதிக்கிற தண்ணீரைத்தான் குடிக்கிறோம் எனவே ஆற்று தண்ணீருக்கு ஏற்பாடு செய்யுங்க என்று திண்ணை பிரசாரத்துக்காக வந்த மு.க.ஸ்டாலினிடம் கூட்டாம்புளி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இன்னும் இடைத்தேர்தலுக்க்கு 4 நாட்களே இருக்கிற நிலையில் இரண்டாவது ரவுண்ட் பிரசாரத்துக்கு வந்திருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். இன்று(14.05.2019) காலையில் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்த அவர், ஓட்டபிடாரம் தொகுதிக்குட்பட்ட காமராஜ்நகர், கூட்டாம்புளி ஆதிதிராவிடர் காலனி பகுதியில் பிரசாரம் செய்தார்.

அவருடன் கனிமொழி, அனிதாராதாகிருஷ்ணன் ஓட்டப்பிடாரம் தொகுதி வேட்பாளர் சண்முகையா உள்ளிட்டோர் வந்திருந்தனர். உள்ளூர் தி.மு.க நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் வரவேற்றனர். ஒரு கட்டிலில் உட்கார்ந்தபடி ஸ்டாலின், அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டார்.

எங்களுக்கு சுயநிதிக்குழு மூலம் வழங்க கூடிய சுழல்நிதி வரவில்லை, முதியோர் பென்சன் வரவில்லை, மக்கள் நலப்பணியாளர்கள் இல்லை. குடிப்பதற்கு நல்ல குடிநீர் கிடைப்பதில்லை. ஒரு குடம் தண்ணீர் பத்து ரூபாய்க்கு வாங்கிதான் குடிக்கிறோம். இங்குள்ள குடிநீரை குடித்து ஏராளமானோருக்கு கிட்னி பாதிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலாக நல்ல ஆற்று தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். சாலை வசதிகள் இல்லை’’ இப்படி தேவைகள் குறித்து மக்கள் கோரிக்கை வைத்தனர்.

’’மீண்டும் நமது ஆட்சி வரும். அப்போது உள்ளாட்சி மூலம் இது எல்லாவற்றையும் நிறைவேற்றி தருவோம்’’ என்றார் ஸ்டாலின்.

LEAVE A REPLY