கூட்டாம்புளி கிராமத்தில் இன்று திண்ணை பிரசாரம் செய்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்

13

ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற இடைத் தேர்தல் பிரசாரத்துக்கு இன்று (13.05.2019) வருகை தரும் தி.மு.க தலைவர் ஸ்டாலின், கூட்டாம்புளி ஆதிதிராவிடர் காலனியில் திண்ணை பிரசாரம் மேற்கொள்கிறார்.

வருகிற 19-ம் தேதி ஓட்டபிடாரம் உள்ளிட்ட 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த தேர்தலுக்காக ஏற்கனவே தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் மீண்டும் இன்றும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

9 மணியளவில் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வரும் ஸ்டாலின், கூட்டாம்புளி கிராமத்திலுள்ள ஆதிதிராவிடர் காலணிக்கு செல்கிறார். அங்கு திண்ணை பிரசாரம் செய்கிறார். மாலை 5 மணியளவில் வல்லநாடு, 6 மணியளவில் தெய்வச்செயல்புரம், 7 மணியளவில் அக்கநாயக்கன்பட்டி, 8 மணிக்கு பரிவல்லிக்கோட்டை ஆகிய கிராமங்களுக்கு சென்று பிரசாரம் மேற்கொள்கிறார்.

LEAVE A REPLY