துப்பாஸ்பட்டி மக்களுக்கு தினந்தோறும் குடிநீர் – வக்கீல் ஜோயல் உறுதி!

11
வக்கீல் ஜோயல்

துப்பாஸ்பட்டி மக்களுக்கு தினம்தோறும் குடிநீர் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக மாநில இளைஞர் அணி துணை செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் உறுதி அளித்துள்ளார்.*

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியம் தருவைகுளம், வெள்ளப்பட்டி பகுதி தேர்தல் பொறுப்பாளரான திமுக மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் தலைமையில் இளைஞர் அணியினர் கழக வெற்றி வேட்பாளர் திரு. சி.சண்முகையா அவர்களுக்கு இன்று(13.05.2019) துப்பாஸ்பட்டியில் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர்.
வாக்கு சேகரிப்பின் போது,கழக மாநில இளைஞர் அணி துணை செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் பொதுமக்களிடம் கூறியதாவது, உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறிட கழக வேட்பாளர் சண்முகையாவை வெற்றி பெற செய்திடுங்கள்.

நாங்கள் வெற்றி பெற்றவுடன் அய்யனார்புரம் – துப்பாஸ்பட்டி, புதூர்பாண்டியாபுரம் – துப்பாஸ்பட்டி சாலைகளை சீரமைத்து புதிய தார் சாலை அமைக்கப்படும், சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் தடையின்றி தினம்தோறும் கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும், தூத்துக்குடியில் இருந்து காலை-மாலை நேரங்களில் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும், சமுதாய நலக்கூடம், சிறுவர் பொழுதுபோக்கு விளையாட்டு பூங்கா அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

புதியதாக அரசு துணை சுகாதார நிலையம், சமுதாய நலக்கூடம் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும், துப்பாஸ்பட்டி கண்மாய், புதூர்பாண்டியாபுரம் நீர்வரத்து கால்வாய் தூர் வாரி சீரமைத்து தரப்படும், பலவருட காலமாக அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருந்துவரும் மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும், 3கிலோமீட்டர் தூரம் சென்று வாக்களிப்பதை தவிர்த்திட துப்பாஸ்பட்டி அரசுப்பள்ளியிலே வாக்குச்சாவடி அமைத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்து பேசினார்.

வாக்கு சேகரிப்பின் போது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் வழக்கறிஞர் சுரேஷ்குமார், கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சங்கரன், தூத்துக்குடி மாநகர முன்னாள் பகுதி செயலாளர் P.பென்னி, முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் ஆனந்தராஜ், ஊராட்சி செயலாளர் பேச்சிராஜா, இளைஞர் அணி தனபால், பால்துரை, முத்தரசன், வசந்த், விமல்ஜி, தளபதி முருகன், சிறுத்தை முருகன், மற்றும் இளைஞர் அணியினர், கழக செயல்வீரர்கள் , மகளிர் அணியினர் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY