விவசயிகள் நலன் காக்கும் அரசாக அதிமுக அரசு செயல்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

3
பழனிசாமி பிரசாரம்

விவசயிகள் நலன் காக்கும் அரசாக அதிமுக அரசு செயல்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.  பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில்  கூறியுள்ளார்.

ஓட்டப்பிடாரம்  சட்டபேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனுக்கு ஆதரவாக இரண்டாம் கட்டமாக   வசவப்பபுரம், வல்லநாடு, தெய்வச்செயல்புரம், உள்ளிட்ட இடங்களில்  இன்று பிரச்சாரம் செய்து பேசிய அவர், ஏழை எளிய மக்களுக்கு பாடுபட்டு வரும் இயக்கம், உங்கள் இயக்கம், நாட்டு மக்களை காப்பாற்றி வருகிற இயக்கம் அதிமுக. அதிமுக கட்சியும், இரட்டை இலை சின்னமும் உடலும் உயிரும் போன்றது. ஆனால் இந்த இயக்கத்தை கட்டி காத்த  ஜெயலலிதாவை பலி வாங்கியவர்களுடன்  சிலர் சேர்ந்து கொண்டு இந்த ஆட்சியை கவிழ்க்க பார்க்கிறார்கள். அவர்களுக்கு சரியான படத்தை புகட்ட வேண்டும்.  விவசயிகள் நலன் காக்கும் அரசாக செய்ல்படும் இந்த அரசு

ஓடை, உள்ளிட்ட நீர்நிலைகளில் தடுப்பணை கட்டும் திட்டம் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் துவக்கப்பட்டுள்ளது. விவசாயிகள்  இருக்கின்ற நீரை சிக்கனமாக பயன்படுத்துவதற்காக சொட்டு நீர் பாசன திட்டம் பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நூறு நாள் வேலை திட்டம் 150  நாளாக பெற்றுத்தர முயற்சி மேற்கொள்ளப்படும். விவசாய, நெசவு தொழிலாளிகளுக்கு தேர்தலுக்கு பின்  இரண்டாயிரம் ரூபாய்  வழங்கபடும். கிராமங்களில் வீட்டு மனை இல்லாதவர்களுக்கு வீட்டுமனை வழங்கப்படும், வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்படும். திறமையான மாணவர்களை உருவாக்க வழங்கப்படும் மடிக்கணினி இந்த ஆண்டு 55 லட்சலத்தில் இதுவரை 39 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ளவர்களுக்கு தேர்தலுக்கு பின்னர் வழங்கபடும் என்றார். பிரச்சாரத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜு, வேட்பாளர் மோகன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

LEAVE A REPLY