நீட்” தேர்வு விஷயத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது – ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் பேட்டி

3
அதியமான் பேட்டி

ஆதி தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது,

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல் மற்றும் நடைபெற உள்ள சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றில் ஆதி தமிழர் பேரவை திமுகவுக்கு ஆதரவாக பரப்புரை செய்து வந்தது.

அந்த வகையில் ஓட்டப்பிடாரத்தில் திமுக வேட்பாளர் சண்முகையாவுக்கு ஆதரவாக இன்று எனது பிரச்சாரம் உள்ளது.

நான் பிரசாரம் செய்த இடங்களில்

மக்கள், முன்கூட்டியே தீர்மானித்து திமுகவுக்கு வாகளித்ததாக கூறினர். இந்த ஆட்சி வெளியேறி புதிய ஆட்சி வர வேண்டும் என விரும்புகிறார்கள்.

இந்த பாராளுமன்ற, இடைத்தேர்தல் முடிவுகளில் திமுக கூட்டணி அதிக தொகுதிகளை பெறும். ஓட்டபிடாரத்தில் திமுக வேட்பாளர் சண்முகையா 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.

அதிமுக ஆட்சியில் 8 ஆண்டாக இவர்கள் செய்த நலத்திட்டம் ஏதும் இல்லை. இருக்கிற திட்டத்தை கூட இவர்களால் முழுமையாக செயல் படுத்த முடியவில்லை.

புதிதாக எந்த திட்டமும் கொண்டுவரவில்லை. இவர்களின் திட்டம் எல்லாம், கலெக்ஷன், கமிசன், கரப்சன் என்பது தான்.

திமுக ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட இலவச பட்டா திட்டத்தை தான் இப்போது வரை இவர்கள் செய்து வருகின்றனர்.

இவர்களின் ஆட்சியில் தமிழக அரசின் உரிமையை ஒவ்வொன்றாக இழந்து உள்ளனர். தமிழகத்திற்கு

தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளனர்.

நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் இயற்றி விட்டு இங்கு நீட் பயிற்சி மையத்தையும் ஏற்படுத்தி வருகிறார்கள்.

நீட் விஷயத்தில் இரட்டை வேடம் போட்டு வருகிறார்கள்.

இவர்களுக்கு இருக்கும் எண்ணம் எப்படியாவது கையை, காலை பிடித்து ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பது தான். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. வருகிற 23- ந் தேதிக்கு பின் கண்டிப்பாக அது தெரியும்.

குறிப்பாக தங்க தமிழ் செல்வன் போன்றோர் கூட இந்த ஆட்சிக்கு எதிராக வாகளிப்போம் என்று கூறி உள்ளனர் என்றார்

LEAVE A REPLY