சதுரகிரி கோயிலில் அன்னதானத்தை தடை செய்த நிர்வாக அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் – திருச்செந்தூரில் ஹெச்.ராஜா ஆவேசம்

10

சதுரகிரி கோயிலில் அன்னதானத்தில் தடை செய்திருப்பது மத உரிமை மீதான அத்துமீறல். எனவே அன்னதானத்தை தடை செய்த நிர்வாக அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பா.ஜ.க., அகில இந்திய செயலாளர் ஹெச்.ராஜா திருச்செந்தூரில் ஆவேசமாக கூறினார்.

திருசெந்தூரில் மாற்றுக்கட்சியிலிருந்து 200 பேர் விலகி பா.ஜ.க.,வில் இணையும் விழா குறிஞ்சி கல்யாண மஹாலில் நடந்தது. பா.ஜ.க., மாவட்ட தலைவர் பாலாஜி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சிவமுருக ஆதித்தன் முன்னிலை வகித்தார். நகர தலைவர் வக்கீல் சரவணன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் அமலிநகரைச் சேர்ந்த நெப்போலியன் தலைமையில் 200 பேர் அகில இந்திய தேசிய செயலாளர் ஹெச்.ராஜா முன்னிலையில் பா.ஜ.க.,வில் இணைந்து கொண்டனர். அப்போது ஹெச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:

’’திருச்செந்தூர் அமலிநகர் சர்ச்சையிலிருந்து தண்டோரா போட்டு நூற்றுக்கணக்கணகான கிறிஸ்தவ மக்களை சமுதாயத்திலிருந்து விலக்கி வைத்திருக்கிறோம் என அறிவித்தள்ளனர். பள்ளி கூடத்திற்கு செல்லும் சின்ன குழந்தைகளிடம் பேச மாட்டோம் என கூறும் வகையில் பிஞ்சு குழந்தைகள் மத்தியில் நஞ்சை விதைத்துள்ளனர். போலீசும், வருவாய் துறை இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. 24 மணி நேரத்தில் நவீன தீண்டாமைக்கு காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சமத்துவம், சகோதரத்துவம் பேசும் திராவிட, கம்யூனிஸ்ட் இயக்கங்கள் கருத்து தெரிவிக்கவில்லை.

திருச்செந்தூரில் விஞ்ஞான முறையில் மயிலை திருடி, அது தெரிந்ததால் மீண்டும் அதே இடத்தில் வைத்துள்ளனர். இணை ஆணையர் பரஞ்ஜோதி அடிப்படையில் இந்து விரோதி. கடந்த 2 மாதங்களுக்கு முன்டு தாமிரபரணி மகா புஷ்கர விழாவில் உற்சவ மூர்த்திகளை கொண்டுவந்து அபிஷேகம் செய்ய அனுமதி கேட்டார்கள். ஆனால் அவர் அகவிதிகளுக்கு புறம்பானது என கூறி அனுமதிக்கவில்லை. கடந்த 2011ம் ஆண்டு சென்னையில் வர்த்தக பொருட்காட்சி தீவு திடலில் நடந்தது. அங்கு 27 கோயில்களிலிருந்து உற்சவ மூர்த்திகளை கொண்டு வந்து அபிஷேக செய்து காட்டினர். கோயில்களில் உற்சவம் எப்படி நடக்கும் என்பதை பார்வையாளர்களுக்கு செய்துகாட்ட கொண்டு வர உத்தரவிட்டார். மத தொடர்பான விஷயத்திற்கு கொண்டுவருவது பொருட்காட்சிக்கு வருவதா? இந்து கடவுள்கள் காட்சி பொருளா?. எனவே பரஞ்ஜோதி மீது அறநிலையத்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோயில் சிலைகள் விஞ்ஞான முறையில் திருடப்படுவதற்கு எப்படி என்பதற்கு திருச்செந்தூர் மயில் சிலை திருட்டு உதாரணம். சி.சி.டி.வி. கேமிராக்களை ஆப் செய்து மயிலை திருடியுள்ளனர். இது தெரிஞ்சதும் மீண்டும் கேமிராக்களை கொண்டு வைத்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சதுரகிரியில் மிகப்பெரிய பிரச்சனை நடந்து வருகிறது. இந்து மத பழக்கவழக்கங்களில் எதிலும் தலையீடுவதற்கு அறநிலைத்துறைக்கு அதிகாரம் இல்லை. அரசு சட்டவிதி 25ல் தெளிவாக கூறுகிறது. அதாவது மதசம்பந்தப்படாத, ஆன்மீக சம்பந்தப்படாத விஷயங்களில் மட்டுமு தான் அறநிலையத்துறை, அரசு தலையிட முடியும். ஆன்மீகத்தில் தலையீட முடியாது. சதுகிரியில் அன்னதானம் வழங்குவது ஆன்மீகம். இதை அறநிலையத்துறை தடுக்க முடியாது. சதுரகிரி கோயில்களில் பல மடாதிபதிகள், பக்தர்கள் அன்னதானம் வழங்குவதை அறநிலையத்துறை தடை செய்து இருக்கிறது. இது மத உரிமை மீதான அத்துமீறல். இந்த மாதிரியான உத்தரவு போட்ட நிர்வாக அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.

தண்ணீர் பாட்டில் 100 விற்கப்படுகிறது. அறநிலையத்துறையில் கொள்ளையடிக்கப்படுகிறது. வியாபாரம் செய்ய கூடியவர்கள் தண்ணீர் பாட்டில் 100 விற்பவர்கள் லஞ்சம் கொடுக்காமலா இப்படி செய்து இருப்பார்கள். அங்கு அன்னதானத்தை அனுமதிக்க வேண்டும். இதில் அறநிலையதுறைக்கு எந்த அதிகாரம் கிடையாது. அறநிலையததுறையில் இந்துக்கள் அல்லாதவர்கள் பணிக்கு வந்தவர்களால் இப்படி நடந்து கொள்கிறார்கள். அறநிலையத்துறை ஆணையர் நான்கு நாட்களுக்கு முன்பு அந்தந்த கோயில்களில் விதிமுறைகள் படி பழக்கங்கள் படி மழை வேண்டி பிரார்த்தனை செய்ய அறிக்கை விட்டிருந்தார். இது வரவேற்கதக்கது. அதனால் தான் சேலம், வேலூரில் மழை பெய்தது. நிச்சமாக அனைத்து கோயில்களிலும் மழை வேண்டி பிரார்த்தனை செய்ய வேண்டும்.

நேற்று முதல் அரசியல் சர்ச்சை. கம்ப்யூட்டரில் மோடியை முனாள் நிதியமைச்சர் சிதம்பரம் கேள்வி கேட்கிறார். கடந்த 10 மாதங்களாக உலக போற்றும் பிரதமர் மோடியை திருடன் என அரசியல் அறிவிழி கூறுகிறார். ராகுல் காந்தி மோடியை திருடன் என்கிறார். ஒரே ஒரு முறை திருடன் மகன் என கூறினோம். 100 முறை சொல்லும் திருடன் மகன் ராகுல் காந்தி என்று. ஆனால் அதற்கு கோபம்ப்படுகின்றனர். ராணுவதளவாடங்கள் வாங்கியதில் லஞ்சம் பெற்றதாக அக்கவுண்ட் இருக்கு. போர்பஸ் ஊழல் நடந்தது. ஸ்வீடனே ஒத்துகொண்டு இருக்கிறது.

ராஜீவ்காந்தி, சோனியா குடும்பம் ஊழல் செய்து இருக்கிறது. முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் நிறைய ஊழல் செய்தவர். 1984ல் 420 தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் 89 தேர்லில் 160 சீட் தான் பெற்றது. திருப்பூர் ஓட்டல், மானாகிரி விவசாய நிலம் அபகரிப்பு உள்ளிட்ட பல ஊழல் சம்பவங்கள் சிதம்பரம் மீது உள்ளது. ஊழலில் உச்சம் சிதம்பரம் தான். மோடியை பார்த்து கேள்வியை கேட்பாரா?. அதிகமாக சிதம்பரம் பேசகூடாது. அதனால் சிதம்பரம் அமைதியாக இருந்தால் நல்லது என எச்சரிக்கை செய்கிறேன்’’ இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY