டெல்லியின் அபார பந்துவீச்சில் சுருண்டது ராஜஸ்தான் – டெல்லி அணிக்கு 116 ரன்கள் இலக்கு

6
சுருண்டது ராஜஸ்தான்
ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான 53-வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி வீரர்கள்  ரஹானே 2 ரன்,  லிவிங்ஸ்டன் 14 ரன், சஞ்சு சாம்சன் 5 ரன், லோம்ரோர் 8 ரன், ஸ்ரேயாஸ் கோபால் 12 ரன், ஸ்டூவர்ட் பின்னி 0 ரன், கெளதம் 6 ரன், சோதி 6 ரன், என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.
இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில்  9 விக்கெட்டுகளை இழந்து  115  ரன்களை எடுத்துள்ளது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரியான் பராக் 50 (49) ரன்கள் எடுத்தார்.
டெல்லி அணியில் சிறப்பாக பந்து வீசிய இஷாந்த் ஷர்மா மற்றும் அமித் மிஸ்ரா தலா 3 விக்கெட்,  டிரென்ட்  போல்ட்  2  விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து டெல்லி அணி  116  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற  இலக்குடன் களமிறங்க உள்ளது.

LEAVE A REPLY