திருச்செந்தூர் முருகன் கோயிலில் மயில் கல்சிலை மாற்றிய விவகாரம் – இணை ஆணையர் உள்பட 6 பேர் மீது வழக்கு !

8
திருச்செந்தூர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர் சன்னதிக்கு எதிரே உள்ள மயில் கல்சிலையை மாற்றிய விவகாரத்தில் இணை ஆணையர் உட்பட 6 பேர் மீது கோயில் போலீசில் வழக்குபதிவு செய்யப்பட்டள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர் சன்னதிக்கு எதிரே உள்ள மயில் கல்சிலையை மாற்றிய விவகாரத்தில் இணை ஆணையர் உட்பட 6 பேர் மீது கோயில் போலீசில் வழக்குபதிவு செய்யப்பட்டள்ளது. இந்த வழக்கு விசாரணை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மாற்றப்பட உள்ளது.

தமிழ்கடவுள் முருகப்பெருமான் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் மூலவர் தவக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். மூலவர் சன்னதிக்கு எதிரே மகாமண்டபத்திதி இரண்டு மயில் மற்றும் நந்தி கல் சிலை உள்ளது. இந்த மூன்று கல்சிலைகளில் இடதுபுறம் உள்ள மயில் சிலை மிகவும் பழமையானது. மயில் சிலையின் தலைபாகம் சேதமடைந்து காணப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி அன்று அர்த்தசாம பூஜை முடிவடைந்ததும் கோயில் நடைகள் சாத்திய பிறகு சி.சி.டி.வி. கேமிரா செயல்பாட்டை நிறுத்திவிட்டு, கோயில் உள்ள சிலர் வெளிநபர்களை அழைத்து வந்த சேதமடைந்த மயில் கல்சிலையை இரவோடு இரவாக மாற்றியு புதிய மயில் சிலையை நிறுவியுள்ளனர். இதனிடையே மயில் கல்சிலை மாற்றி சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் மாற்றிய புதிய மயில் சிலையை 15 நாட்கள் கழித்து அதாவது அதே மாதம் 19ம் தேதி அகற்றிவிட்டு மீண்டும் பழமையான மயில் சிலையை அதே இடத்தில் நிர்மானம் செய்தனர்.

இதுகுறித்து இரவு பணியிலிருந்து கோயில் உள்துறை சூப்பிரெண்ட், மணியம், திருமேனிகாவல் பணி செய்தவர்கள் யாரும் அறநிலையத்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லையாம். இந்த சம்பவம் நடந்து ஒன்றை ஆண்டுகுளுக்கு மேலாகிவிட்டது. இதுகுறித்து அறநிலையத்துறை உயரதிகாரிகளுக்கு புகார்கள் கூறப்பட்டது. ஆனாலும் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக இக்கோயிலிருந்து பணிபுரிந்து முன்னாள் இணை ஆணைர் பாரதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அறிக்கை சமர்பித்தார்.

இதனிடையே திருச்செந்தூ கோயிலில் மயில் சிலையை மாற்றிய சம்பவம் தொட்பாக ஐகோர்ட்டால் நியமனம் செய்யப்பட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு புலனாய்வு அதிகாரி ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் கடந்த சில மாதங்களாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அவரது குழுவை சார்ந்த அதிகாரிகள் கோயிலுக்கு வந்து மாற்றப்பட்ட சிலையை படம் பிடித்து விசாரணையை துவங்கினர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஜ.ஜி.பொன்மாணிக்கவேல் திருச்செந்தூர் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டார்.

மேலும் சம்பவம் தொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்தார். இதற்கிடைலேய மயில் சிலையை மாற்றி மறைந்த சம்பவம் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் தென்னரசன் திருச்செந்தூர் கோயில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சம்பவத்தன்று கோயிலில் திருமேனிகாவல் பணியிலிருந்து சுவாமிநாதன், ராஜா, கைங்கரிய சபா உறுப்பினர்கள் குமார், சுரேஷ், கோயில் உள்துறை சூப்பிரெண்ட் பத்மநாபன், அப்போது கோயில் இணை ஆணையர் பொறுப்பு வகித்த பரஞ்ஜோதி ஆகியோர் மீது போலீசார் 120(பி), 457(2), 406, 109, 217 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர். சதி செய்து, நம்பிக்கை மோசடியாக சிலையை திருடி அகற்றுதல், நடந்த சம்பவத்தை மறைத்தல் ஆகிய குற்றத்திற்காக வழக்குபதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வருவதால் வழக்கு விசாரணை அவர்களுக்கு மாற்றப்பட உள்ளது.

சஸ்பெண்ட்:

திருச்செந்தூர் கோயிலில் மூலவர் சன்னதிக்கு எதிரே உள்ள பழமையான கல் மயில் சிலையை மாற்றிய விவகாரம் கடந்த சில மாதங்களாகவே பெரும் விஸ்வரூபம் எடுத்தது. இந்த பிரச்சனையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் நேரடி விசாரணையாக களத்தில் இறங்கியதும் அதுவரை மவுனம் காத்த அறநிலையத்துறை திடீர் சுறுசுறுப்பு காட்டியது. இதனால் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் விசாரணை வளையத்திற்குள் சிக்கியது தெரியவந்ததும் திருச்செந்தூர் கோயிலில் பணியாற்றிய உள்துறை சூப்பிரெண்ட் பத்மநாபன், மணியம் சுப்பையன் ஆகிய இருவரையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயில் இணை ஆணையர் குமரதுரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். அதே போல் கோயிலில் நேரடி பணியில் இல்லாத போதும், திருமேனிகாவல் பணி செய்த சுவாமிநாதன், ராஜா, கைங்கரிய பணி செய்து வரும் குமார், சுரேஷ், பிரபு ஆகியோர் கைங்கரிய பணி செய்வதற்கு தடை செய்து கோயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

சிலையை மாற்றிய விவகாரத்தில் அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி நேரடி தொடர்பு இல்லாத போதும், நடந்த சம்பவத்தை அறநியைலதுறை உயரதிகாரிகளுக்கு போலீசிற்கு தெரியாமல் மறைந்ததற்காக அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

யார் உத்தரவு?

திருச்செந்தூர் கோயிலில் பழமையான மயில் சிலை மூலவர் சன்னதிக்கு எதிரெ உள்ளது. இதில் பொதுதரிசன வழியில் வரும் பக்தர்கள் இந்த மயில் சிலையை சுற்றி வந்து தான் சுவாமி தரிசனம் செய்ய முடியும். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு மயில் சிலைகளில் இடதுபுறம் உள்ள மயில் சிலையின் தலை பகுதி பின்னமாகி காணப்பட்டது. இதனால் ஊருக்கு நல்லதல்ல, சமுதாயத்திற்கு நல்லதல்ல என கருதி மயில்சிலையை சிலர் மாற்றியதாக கூறப்படுகிறது. பொதுவாக இது போல சேதமடைந்த சிலைகளை மாற்ற வேண்டுமானால் அறநிலையத்துறை ஸ்தம்பதி, ஆணையர், இணை ஆணையரிடம் உரிய அனுமதி பெற்று உரிய பரிகார பூஜைகளை செய்து தான் சேதமடைந்த சிலைகளை மாற்ற வேண்டும். ஆனால் இக்கோயிலில் மயில் சிலையை அறநிலையத்துறை ஆணையருக்கு தெரியாமல் திடீரென இரவோடு இரவாக மாற்றிய சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை ஆச்சாரியத்தை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன்பிறகே சிலை மாற்றிய விவகாரம் சூடுபிடித்துள்ளது. அதன்பிறகு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் விசாரணை தீவிரமானது. எனவே நடந்த சம்பவத்தில் நேரடியாக பங்கு வகித்து சிலையை மாற்ற உத்தரவு பிறப்பித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் விரும்புகின்றனர்.

LEAVE A REPLY