திருச்செந்துர் முருகன் கோயிலில் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் மனமுருகி சுவாமி தரிசனம் !

24

திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்ரமணிய சாமி கோயிலில் திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் இன்று (மே 02) காலை மனமுருகி சுவாமி தரிசனம் செய்தார்.

செல்லும் இடங்களில் எல்லாம் இந்துக்களின் நம்பிக்கையையும், சடங்குகளையும் மிக கடுமையாக விமர்சித்தும், கிண்டல் செய்தும் பேசி வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். அதிலும் மாற்று மதத்தவரின் விழாக்களில் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவது போல் பேசுகிறார் ஸ்டாலின். இதே போல் அவரது சகோதரி கனிமொழியும் இந்து கடவுள்களையும், இந்துக்களின் நம்பிகையையும் விமர்சனம் செய்து வருகிறார். ஆனால் அவர்கள் குடும்பத்தை சேர்ந்த ஸ்டாலினின் மனைவி துர்கா கோயில் கோயிலாக சென்று வழிபாடு நடத்தி வருகிறார்.

இன்று காலை 10 மணியளவில் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு சென்ற துர்கா மனமுருகி பிரார்த்தனை செய்தார். தினந்தோறும் காலை 10 மணிக்கு நடக்கும் மூலவர் அபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிறகு சிறப்பு பூஜையும் செய்தார். துர்காவுடன் ஆலடி அருணாவின் மகளும், திமுக முன்னாள் அமைச்சருமான பூங்கோதையும் உடன் சென்றார்.

LEAVE A REPLY