மலேசியாவில் நடைபெறவுள்ள சர்வேதச போட்டிக்கு தேர்வாகியுள்ள உதவி ஆய்வாளர் மகள் – வாழ்த்தினார் மாவட்ட எஸ்.பி

8

சிலம்பத்திற்கான தெற்கு ஆசிய விளையாட்டுப்போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று, மலேசியாவில் நடைபெறவுள்ள சர்வேதச போட்டிக்கு தேர்வாகியுள்ள உதவி ஆய்வாளர் மகள் செல்வி. ஸ்வேதா என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, வாழ்த்தினார்.

கடந்த 26.04.2019 முதல் 28.04.2019 வரை 3 நாட்கள் நடைபெற்ற சிலம்ப விளையாட்டுக்கான தெற்கு ஆசிய விளையாட்டு போட்டி நாகா;கோவிலில் நடைபெற்றது. இந்த விளையாட்டுப்போட்டியில் இந்தியா, மலேசியா, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் சிங்கப்பூர்; ஆகிய 5 நாடுகளைச் சேர்ந்த 600 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இந்த விளையாட்டுப்போட்டியில் விளாத்திக்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணிபுரியும் ஜெயமணி என்பவரின் மகள் ஸ்வேதா என்பவர் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தைப்பிடித்து வெண்கலப்பதக்கம் வென்று மலேசியாவில் நடைபெறவுள்ள சர்வதேச சிலம்பம் விளையாட்டுப்போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.

இன்று அவரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, பாராட்டி அவர், மேலும், மேலும் வெற்றி பெற தேவையான உதவிகளை செய்வதாகவும் கூறி வாழ்த்தினார்.

LEAVE A REPLY