ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டெல்லி அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

9
ஐபிஎல்
விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர்  தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான 46-வது லீக் போட்டி நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து  முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை எடுத்தது.
டெல்லி அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 52 (37) ரன்கள், ஷிகர் தவான் 50 (37) ரன்கள் எடுத்தனர். மேலும் ரூதர்போர்டு ஆட்டமிழக்காமல் 28 (13) ரன்கள் எடுத்தார்.
பெங்களூர் அணியில் யுஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட் , உமேஷ் யாதவ், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து,  188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் டெல்லி அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெங்களூர் அணியில் அதிகபட்சமாக பார்த்தீவ் பட்டேல் 39 (20), ரன்கள், ஸ்டோனிஸ் ஆட்டமிழக்காமல் 32 (24) ரன்கள், குர்கீரத் சிங் மன் 27 (19) ரன்கள், சிவம் துபே 24 (16) ரன்கள். விராட்கோலி 23 (17) ரன்கள் எடுத்தனர்.
டெல்லி அணியில் அமித் மிஸ்ரா மற்றும் ரபடா 2 விக்கெட், ரூதர்போர்டு, அக்‌ஷர் பட்டேல், இஷாந்த் ஷர்மா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

LEAVE A REPLY