திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏப்ரல் மாத உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1.59 கோடி

12

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏப்ரல் மாத உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1.59 கோடி கிடைத்தது.

இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் இரு நாட்கள் உண்டியல்கள் எண்ணப்படுகின்றன. உண்டியல் எண்ணும் பணி நடந்தது. கோயில் இணை ஆணையர் குமரதுரை தலைமை வகித்தார். உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினென் சித்தர் மடம் குருகுலம் வேதபாடசாலை உழவாரப்பணிக்குழு பெண்கள், அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் மற்றும் கோயில் பணியாளர்கள் 250 கலந்து கொண்டனர்.

இதில் உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே 48 லட்சத்து 42 ஆயிரத்து 704ம், மேலகோபுர திருப்பணி உணடியலில் ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்து 142ம், தற்காலிக உண்டியல் மூலம் ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்து 153ம், கோசாலை உண்டியலில் ரூ.65 ஆயிரத்து 190ம், யானை பராமரிப்பு உண்டியல் மூலம் ரூ.16 ஆயிரத்து 501ம், கோயில் அன்னாதான உண்டியலில் ரூ.5 லட்சத்து 58 ஆயிரத்து 532ம், சிவன் கோயில் அன்னதான உண்டியலில் ரூ.6 ஆயிரத்து 778ம் என மொத்தம் ரூ.1 கோடியே 59 லட்சத்து 49 ஆயிரம் காணிக்கையாக கிடைத்தது.

இதில் தங்கம் ஆயிரத்து 60 கிராமம், வெள்ளி 13 ஆயிரத்து 510 கிராம், வெளிநாட்டு கரன்சி 170ம் கிடைத்தது.

LEAVE A REPLY