தூத்துக்குடி சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் 504 திருவிளக்கு பூஜை

8

தூத்துக்குடி சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் சித்ராபௌர்ணமி முன்னிட்டு 504 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலில் சித்ராபௌர்ணமியை முன்னிட்டு 504 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சித்ரா பௌர்ணமியையொட்டி திருவிளக்கு பூஜையில் உலகில் அன்பு அமைதி நிலவளம் வேண்டியும், தமிழகத்தில் நல்ல மழை பெய்து கோடைவெயிலின் தாக்கம் குறைந்திடவும், அனைத்து உயிர்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் குடிதண்ணீர் கிடைத்திட வேண்டியும், விவசாயம் செழித்து அனைவரும் நலமுடன் வாழ வேண்டி பஜனை பாடல்களுடன் தீப அலங்காரம் நடைபெற்று பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

பௌர்ணமி திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் ஆறுமுகசாமி செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY