திருச்செந்தூர் அன்பிற்பிரியாள் அம்மன், உச்சினிமாகாளியம்மன் கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன கும்பாபிஷேகம்

6

திருச்செந்தூரில் அன்பிற்பிரியாள் அம்மன், உச்சினிமாகாளியம்மன் கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விமான கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் தெருவில் உள்ள வாணியர் செட்டியார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட செல்வ சுந்தர விநாயகர், அன்பிற்பிரியாள் அம்மன், உச்சினிமாகாளியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் ஒரே பீடத்தில் இரட்டை அம்மன் பக்தர்கள் அருள்பாலிக்கினறனர். இக்கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கோயில் புனரமைக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன கும்பாபிஷேகம் இன்று நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 15ம் தேதி அதிகாலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம், கஜபூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. பின்னர் தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்றுகாலை 7 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. ஸ்பார்சா ஹூதி, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு பூஜை செய்யப்பட்ட கும்பங்களை மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் விமான தளத்திற்கு எடுத்து வந்தனர்.

காலை 10 மணிக்கு செல்வசுந்தர விநாயகர், அன்பிற்பிரியாள் அம்மன், உச்சினிமாகாளியம்மன் ஆகிய விமான கலசங்களுக்கு சிவசுப்பிரமணியன், ஹரிமுத்தையா, குருநாதமுத்தையா சிவாச்சாரியார்களால் பூஜைகள் செய்யப்பட்டு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் விநாயகர், அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மதியம் அன்னதானம் நடந்தது. மாலை 6 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, இரவு புஷ்பாஞ்சலி தீபாராதனை நடந்தது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.

LEAVE A REPLY