தூத்துக்குடி சண்முகபுரம் கன்னிவிநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி திருவிளக்கு பூஜை !

51

தூத்துக்குடி சண்முகபுரம் கன்னிவிநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் திருக்கோவிலுக்குட்பட்ட கன்னிவிநாயகர் திருக்கோவில் வெள்ளிவிழா ஆண்டு அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்று மதியம் அன்னதானம் நடைபெற்றது. இதனையொட்டி இரவு 108 மாவிளக்குடன் சப்பரபேரனி நடைபெற்றது.

பின்னர் உலக மக்கள் ஓற்றுமையுடன் வாழ வேண்டியும், தமிழகத்தில் நல்ல மழைபெய்து விவசாயம் செழித்து, எல்லோரும் வளமுடனும் எல்லா நன்மைகளும் பெற்று நலமுடன் வாழ வேண்டும் என்று 108 திருவிளக்கு பூஜை பஜனை பாடல்களுடன் நடைபெற்று பின்னர் விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

விழாவில் தர்மகர்த்தா பழனிச்சாமி நாடார், தலைவர் சித்திரைவேல்நாடார், செயலாளர் தனபாலன்நாடார், பொருளாளர் செல்வராஜ் நாடார், திருப்பணிகமிட்டி தலைவர் மாணிக்கவேல், செயலாளர் அசோகன், பொருளாளர் சரவணன், கும்பாபிஷேககமிட்டி தலைவர் தங்கராஜ்,

செயலாளர் வெள்ளத்துரை, துணைத்தலைவர் சண்முகசுந்தரம், மாதர்சங்க தலைவர் பிரபாரத்தினம், செயலாளர் ரனிதாசெல்வராஜ், பொருளாளர் காஞ்சனா ராமமூர்த்தி,  அமைப்பாளர்

பானுராஜசேகரன், பத்திரகாளியம்மன் கோவில் செயலாளர் திருசங்குராஜன் உள்பட பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை மாதர்சங்க நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

LEAVE A REPLY