மாபெரும் வெற்றி பெற்ற ’பாகுபலி’ படம் மாதிரியே எல்லாவற்றையும் பிரம்மாண்டமாகத்தான் யோசிப்பேன்- ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் பற்றிப் பேசும் இயக்குநர் ராஜமெளலி

9
ராஜமெளலி

‘பாகுபலி’ படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சர்வதேச அளவில் கவனம் ஈர்த்திருப்பவர் இயக்குநர் ராஜமௌலி. இதைத் தொடர்ந்து அவர், ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் என தெலுங்கு சினிமாவின் இரண்டு உச்ச நட்சத்திரங் களை வைத்து ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற படத்தை உருவாக்கப்போகிற தகவல் காற்றில் வலம் வந்துகொண்டிருந்தது. அந்தப் படம் பற்றிய தகவல் கள் அனைத்தும் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந் தன.

இந்நிலையில் நேற்று ஹைதராபாத்தில் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் பற்றிய முதல் பத்தி ரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தயாரிப் பாளர் டிவிவி தானய்யா, படத்தின் நாயகர்கள் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர், இயக்குநர் ராஜமௌலி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பின்போது ராஜமௌலி பேசிய தாவது:

“1898-ல் பிறந்தவர் அல்லூரி சீதாராம ராஜூ, 1901-ல் பிறந்தவர் கோமரம் பீம். இருவருமே ஒரே மாதிரியான சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தவர் கள். இளம் வயதிலேயே வீட்டைவிட்டு வெளியேறிய இவர்கள் இருவரும், வீட்டைவிட்டுப் பிரிந்திருந்த காலகட்டத்தில் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? எங்கே வாழ்ந்திருந்தார்கள் என்பன உட்பட எந்தத் தகவலும் இதுவரை யாருக்குமே தெரியாது. ஆனால், இருவருமே திரும்பவும் ஊருக்குள் வந்து, பழங்குடி மக்களின் நலனுக்காக, சுதந் திரத்துக்காக போராடினார்கள். கொரில்லா வகை தாக்குதல், காவல் நிலையங்களை தாக்கி ஆயுதங்களைக் கைப்பற்றுவது, மக்கள் சக்தியை ஒன்றுதிரட்டுவது என செயல்பட்டார்கள். இவை எல்லாம் அந்த இருவரைப் பற்றிய நமக்கு தெரிந்த விஷயங்கள். இருவருமே ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டனர்.

இவர்களுடைய வீர தீர வரலாற்றைப் படிக்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கிட்டத்தட்ட இரண்டு பேருமே ஒரே காலகட்டத்தில் பிறந்தது, ஒரே வயதில் வீட்டைவிட்டு வெளியேறியது, எங்கு சென்றார்கள் என்ன செய்தார்கள் என்பது வெளியில் தெரியாத ரகசியம், மீண்டும் ஊருக் குள் வந்து நாட்டுக்காக ஒரே வகையில் போராடியது எல்லாவற்றையும் அறிந்தபோது, அவர்களைப் பற்றிய மேலும் பல தகவல்களை திரட்ட ஆரம்பித்தேன். அந்த இருவரைப் பற்றிய வரலாற்று அடிப்படையில்தான் இந்தக் கதையை அமைத்திருக்கிறேன்.

சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த இந்த மாவீரர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்காமலே இருப் பது, அவர்களின் போராட்டத்துக்கான மூலக்கார ணம், இருவரும் நட்பாக இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பது போன்று திரைக்கதை அமைத்திருக்கிறேன். இந்தக் கதையை விரிவான காட்சிபூர்வ வடிவமாக்கி மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கப் போகிறோம்எனக்கு எப்போதும் எதுவுமே சிறியதாக இருந் தால் பிடிக்காது. எல்லாவற்றையும் பிரம்மாண்ட மாகத்தான் யோசிப்பேன். இந்தப் படத்தையும் பிரம்மாண்டமாகத்தான் எடுக்கவுள்ளேன். சுதந் திரப் போராட்ட காலத்தில் நடக்கும் கதை என்பதால் அந்தக் கால மக்களுடைய கலாச் சாரம், மொழி, நடை, உடை, நாட்டு நடப்பு என பலவற்றைப் பற்றியும் நிறைய ஆய்வுகள் மேற்கொண்டோம். இதனால்தான் படத்தின் தயாரிப்பு தாமதமாக தொடங்குகிறது.

கிராஃபிக்ஸ் பணிகளுக்கென்றே ஆறு மாதங்கள் ஒதுக்க வுள்ளோம். இப்படத்துக்கு இயற்கையான ஒரு தோற்றம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் கிராஃபிக்ஸ்ஸைப் பயன்படுத்துகிறேன். படத்தின் பிரம்மாண்டத்துக்காக அல்ல. அதேபோல, இரண்டு பெரிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் முதன்மை கதாபாத்திரங்களாக இருக்கும்போது துணை கதாபாத்திரங்களிலும் பிரபல நடிகர்கள் தேவைப்பட்டார்கள்.

பாலி வுட் நட்சத்திரம் அஜய் தேவ்கன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் ராம்சரணின் ஜோடியாக அலியா பட் நடிக்கிறார். ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக டெய்ஸி எட்கார் ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் நடிகை நடிக்கிறார். இயக்குநர் சமுத்திரகனி பேசப்படும் பாத்திரத்தில் நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் கதைக்கு முது கெலும்பாக இருக்கும். இப்படி மிக வலிமையான துணை கதாபாத்திரங்கள் உள்ளனர்” என்று பேசினார் ராஜமௌலி.

கிட்டத்தட்ட ரூ.400 கோடி வரை படத்தின் பட்ஜெட் இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து முக்கிய மொழிகளிலும் தயாராகப் போகும் இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜூலை 30-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

LEAVE A REPLY