ஸ்ரீவைகுண்டம் நத்தம் ஸ்ரீவிஜயாஸன பெருமாள் கோவிலில் கருடசேவை

7

நவதிருப்பதிகளில் இரண்டாம் ஸ்தலமான நத்தம் ஸ்ரீவிஜயாஸன பெருமாள் கோவில் மாசி ப்ரம்மோத்ஸவ திருவிழா ஆண்டுதோறும் பக்தர்களால் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்தாண்டிற்கான திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.

5ம் திருவிழாவான நேற்று காலை 9.30மணிக்கு எம்இடர்கடிவான் பெருமாள் மாடவீதிகளில் உலா வந்தார். பகல் 11மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், நாலாயிரதிவ்யபிரபந்த கோஷ்டியும், சாத்துமுறையும் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 7.30மணிக்கு எம்இடர்கடிவான் பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதில், நிர்வாக அதிகாரி இசக்கியப்பன், ஆய்வாளர் முருகன், ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி, வாசன், வேணுகோபால், அர்ச்சகர்கள் கண்ணன், ராஜகோபால் மற்றும் பக்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY