நொடிக்கொரு முகபாவனை: சிவாஜி பற்றி சிலிர்ப்பு அனுபவம்

17
முகபாவனை

கோவையில் நடைபெறும் ‘யாதும் தமிழே’ நிகழ்ச்சியில் இந்தியன் ஆர்ட்ஸ் பீரோ நிர்வாக இயக்குனர் ஜெயக்குமார் சிவாஜி கணேசன் குறித்த தனது நினைவுகளை காணொலியில் பதிவு செய்தார்.

அவர் கூறியதாவது:

சிவாஜி அப்பாவைப்பற்றி 2 நிமிடம் பேசச்சொன்னது பெருமையாக இருக்கிறது. 1986-ல் குன்னூர் ஷூட்டிங்கில் இருந்தபோது உடல் நலம் சரியில்லாமல் போனபோது கோவையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை பார்த்துக்கொண்டோம். அதுமுதல் சிவாஜி சாரும் கமலாம்மாவும் என்னை மகனே என்று அழைப்பார்கள். நானும் அப்பா என்றுத்தான் அழைப்பேன். அதுமுதல் அவர் கோவை வரும்போதெல்லாம் எங்கள் இல்லத்தில்தான் தங்குவார்.

அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு அவர் உடல்நலம் கவலைக்கிடமானபோது அவர் அருகில் இருந்தேன். இரவு 8 மணி அளவில் அவர் உயிர் பிரிந்தபோது அவர் அருகில் இருந்தேன். மிகப்பெரிய இழப்பு அது. அவர் அஸ்தியைக் கரைக்க அவரது குடும்பத்தாருடன் இணைந்து காசிக்கு சென்றது எனக்கு பெருமையான ஒன்று.

கடைசி காலத்தில் அவரையும் கமலாம்மாவையும் இணைத்து எடுத்த போட்டோக்கள் அவரது இல்லத்தில் இன்றும் உள்ளது. செவாலியே பட்டம் கிடைத்தபோது அவரை உலகத்தில் தலைச்சிறந்த கேமராவில் போட்டோ எடுத்தோம். அப்போது 9 செகண்டுகள் மோஷன்கேமரா ஓடப்போகிறது அதற்குள் உங்கள் பரிணாமங்களை காட்டுங்கள் என்றவுடன் அந்த 9 செகண்டுகளில் 9 பாவனைகளை காட்டினார்.

அவர் மறைந்துவிட்டார், கமலாம்மாவும் மறைந்துவிட்டார் ஆனாலும் அந்தக்குடும்பத்தினர் இன்றளவும் அதே பாசத்துடன் உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY