நாசரேத் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா!

21

நாசரேத்  பேரூராட்சியில்  புகையில்லா பொங்கல் விழிப்புணர்வு முகாமில் போகிப் பண்டிகையில் பழைய கழிவு பொருட்களை எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்படைதல் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் உண்டாகும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் இப் பேரூராட்சி செயல் அலுவலர், பணியாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார பணியாளர்கள் பேரூராட்சி பரப்புரையாளர்கள், சமுதாய அமைப்பாளர் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் அலுவலக வளாகத்தில் பொங்கல் வைத்து தமிழர் திருநாள் செயல் அலுவலர் கே.ஆர்.பி.மணிமொழி செல்வன் ரெங்கசாமி தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் பேரூராட்சி ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

LEAVE A REPLY