சென்னையிலிருந்து முத்துநகர் ரயில் மூலம் தூத்துக்குடிக்கு வந்த திருநங்கை சானியாவுக்கு உற்சாக வரவேற்பு.

4

ஒரு மாற்றம்!! ஒரு முயற்சி!! ஒரு பயணம்!! என்ற தலைப்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார பயணம் கடந்த ஜன. 2ம் தேதி சென்னையிலிருந்து 3 பெண்கள், 4 திருநங்கைகள் கார் மூலம் தமிழ்நாடு, கர்னாடகா, தெலுங்கனா, ஆநதிரா உள்ளிட்ட 5 மாநிலங்களில் தொடர்ச்சியாக 10 மாவட்டங்களில் தலை கவசம் அணிவதன் அவசியம், சீட் பெல்ட் அணிவதன் அவசியம், குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி 10 நாட்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்க்கொண்டு 3200 கிலோ மீட்டர் பயணம்

மேற்க்கொண்டு சாதனை நடத்திய திருநங்கைகளுக்கு அனைத்து மாநிலங்களிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் இக்குழுவினர் கடந்த 12ம் தேதி சென்னையில் நிறைவு செய்த இவர்கள், சென்னையிலிருந்து முத்துநகர் ரயில் மூலம் தூத்துக்குடிக்கு வந்தனர். இதில் முக்கிய பங்கு வகித்த தூத்துக்குடியை சார்ந்த திருநங்கை சானியாவுக்கு தூத்துக்குடி இரயில்வே நிலையத்தில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருநங்கை என்றாலே வித்தியாசத்துடன்  பார்க்கும் இந்த உலகில் இவரது முயற்சிக்கு அனைவரும் பாராட்டினர்கள்.

LEAVE A REPLY