தமிழ்நாடு சுற்றுலா துறையுடன் இணைந்து ஈஷாவில் பொங்கல் விழா கொண்டாட்டம்

1
தமிழ்நாடு

ஈஷா யோகா மையம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் கோவையில் உள்ள 112 ஆதியோகி முன்பு பொங்கல் விழா வரும் 16-ம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் பல்வேறு பாரம்பரிய மற்றும் கலாச்சார விழாக்கள் ஆண்டுதோறும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பறைச்சாற்றும் பொங்கல் விழா வரும் 16-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இவ்விழா தமிழ்நாடு சுற்றுலா துறையுடன் இணைந்து நடத்தப்படுகிறது. இதில் சுற்று வட்டார கிராம மக்கள், ஈஷா தன்னார்வலர்கள், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்.

விழா பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். விழாவின் தொடக்கத்தில் பல்வேறு கலாச்சாரம் மற்றும் மதத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து மண் பானைகளில் பொங்கல் வைக்க உள்ளனர். இதையடுத்து, தாராபுரத்தைச் சேர்ந்த கிராமிய கலைஞர்களின் பறையாட்டம் நடைபெறும். அதை தொடர்ந்து சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா, சம்ஸ்கிருதி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் குழுவினரின் இசை நிகழ்ச்சிகளும், பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் நடைபெறும்.

மேலும், ஈஷாவில் வளர்க்கப்படும் காங்கேயம், ஆலம்பாடி, உம்பளாச்சேரி, ஓங்கோல், கிர், காங்கிரிஜ் உள்ளிட்ட 15 வகையான நாட்டு மாடுகளின் கண்காட்சியும் நடைபெறும். இறுதியாக விழாவுக்கு வருகை தரும் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும்.

LEAVE A REPLY