தூத்துக்குடி ராலீஸ் சுந்தரராஜன்யாதவ் 92-வது பிறந்த நாள் விழா – டாக்டர் தேவநாதன் யாதவ் பங்கேற்பு !

86

தூத்துக்குடி மாவட்ட யாதவர் சங்கம் சார்பில் தமிழ்நாடு யாதவ மகா சபையின் முன்னாள் மாநில மூத்த துணை தலைவரும் தூத்துக்குடி ராலீஸ் சுந்தர்ராஜன் யாதவ் ன் 92 வது பிறந்த நாள் விழா, தூத்துக்குடி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.

இந்த விழாவிற்கு இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தலைவர் டாக்டர் தேவநாதன் யாதவ் தலைமை வகித்தார். கார்மேககோனார் நற்பணி மன்ற தலைவர் பரமேஸ்வரன்யாதவ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக தென் மண்டல மகா சபை அமைப்பு செயலாளர் மரியசுந்தரம்யாதவ், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக மாநில இளைஞரணி செயலாளர் அழகுசுந்தரம் யாதவ், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தேர்தல் பணிக்குழு ஊத்துமலை சரவணன் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மறைந்த ராலீஸ் சுந்தரராஜன் உருவ படத்திற்கு டாக்டர் தேவநாதன் யாதவ் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னதாக டாக்டர் தேவநாதன் யாதவ் க்கு பெரிய மலர் மாலை அணிவித்து வரவேற்றார்கள் தொடர்ந்து தேவநாதன் வாழ்த்துரை வழங்கினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

LEAVE A REPLY