ஸ்டெர்லைட் ஆலை வழக்கு வரும் 10-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு !

6

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடந்து வரும் ஸ்டெர்லைட் ஆலை குறித்த வழக்கு விசாரணை வரும் 10-ம் தேதி திங்கள் கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

தூத்துக்குடியில் கடந்த பல வருடங்களாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் ஆலை, கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருக்கிறது. ஆலையை மீண்டும் திறப்பதற்கு ஆலை நிர்வாகம் சட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. அதற்கு எதிராக பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்தநிலையில் ஸ்டெர்லைட் ஆலை சார்பில் தேதிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. உண்மை நிலையை அறிய தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஆய்வு கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி, ஆய்வு செய்து கடந்த மாதம் இறுதியில் அறிக்கை தாக்கல் செய்தது. ஆலையை மூடியது தவறு என்கிற அர்த்ததில் இருந்தது அந்த அறிக்கை.

மேலும் இந்த வழக்கை டிசம்பர் 7-ம் தேதியான இன்றைய தேதிக்கு ஒத்தி வைத்திருந்தது. அறிவித்தப்படி இன்று இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது. முடிவில் வரும் 10-ம் தேதி திங்கள் கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் தூத்துக்குடியில் ஆங்காங்கே போலீஸார் அதிகம் குவிக்கப்பட்டிருந்தனர்.

LEAVE A REPLY