டெல்டா மாவட்டங்களில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை மீட்க சிறப்பு திட்டம்

11
டெல்டா

கஜா புயல் தாக்கிய மாவட்டங் களில் மன அழுத்தத்தால் பாதிக் கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவும், இதற் கான எதிர்கால திட்டத்தை உருவாக் குவதற்காகவும் மனநல மருத்து வர்கள் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வருகின்றனர்.

கஜா புயலின் தாக்கியதில் புதுக் கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட் டங்களில் பொதுமக்கள், விவசாயி கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். வாழ்வாதாரத்தை இழந்துவிட்டதை எண்ணி விவசாயிகள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள் ளனர். அதிர்ச்சியூட்டும் தற்கொலை சம்பவங்களும் நடைபெறுகின்றன.

இதைத் தடுக்கும் வகையில் விவசாயிகளுக்கு மனநல ஆலோச னைகள் வழங்க சென்னையில் உள்ள அரசு மனநல காப்பகம் மற்றும் மாவட்ட மனநல திட்டத்தின் சார்பில் புயலால் பாதித்த மாவட்டங்களில் ஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், மனநல பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு சிகிச்சை அளிப்பதோடு, எதிர் காலத்தில் இதுபோன்ற இயற்கை பேரிடர் காலங்களில் அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பதற் கான சிறப்புத் திட்டத்தை உருவாக் குவதற்கான பணியும் மேற்கொள் ளப்பட்டுள்ளது. இது, இந்தியா விலேயே முன்மாதிரி முயற்சி என் பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட மனநல திட்ட அலுவலர் ஆர்.கார்த்திக் தெய்வநாயகம், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உத்தரவின்பேரில் சென்னையில் இருந்து மனநல மருத்துவ அலுவ லர் அரவிந்தன் தலைமையில் 11 பேர் கொண்ட குழு புதுக்கோட்டையில் முகாமிட்டுள்ளது. இக்குழுவினரு டன் மாவட்ட மனநல திட்ட அலுவல கத்தினரும் செயல்படுகின்றனர்.

இதுபோன்ற இயற்கை பேரிடர் காலங்களில்தான் மக்களுக்கு சமூக, பொருளாதார பாதிப்புகள் அதிகமாக ஏற்படுகின்றன. இதற்கு என்ன காரணம்? இத்தகைய பிரச்சி னைகளை எவ்வாறு சந்திக்கிறார் கள்? என்பன குறித்த தரவுகள் இது வரை இருப்பதாக தெரியவில்லை. எனவே, இதைப் பற்றிய ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது.

இந்தக் குழு, களத்துக்கு சென்று மக்களைச் சந்தித்தபோது, உணவு, வீடுகள், பொருளாதார நெருக்கடி, உடல்நலக் குறைபாடு இவற்றின் மூலம் மனநல சிக்கல்கள் ஏற்பட்டி ருப்பதும், சிலருக்கு மீண்டும் புயல் வந்துவிடுமோ என்ற அச்சம், தூக்கமின்மை போன்றவற்றினா லும் மனநல பாதிக்கப்பட்டிருப் பதை உணர முடிந்தது. மீட்பு மற் றும் சீரமைப்புப் பணியில் ஈடுபட் டுள்ள மின்வாரியம், காவல், ஊரக வளர்ச்சி, சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர் கள் மனநல சிக்கல்களுக்கு ஆளாகின்றனர்.

இதுபோன்ற காலகட்டங்களில் அனைவருமே பாதிப்படைவதால், ஒருவருக்கொருவர் பிரச்சினை களை பகிர்ந்து கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. அதுபோன்று நினைப்பவர்களுக்கு இந்தக் குழு மிகப்பெரிய தீர்வாக அமைகிறது. மேலும், பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் தகவல்களை திரட்டி எதிர்காலத்தில் இதுபோன்ற இயற்கை பேரிடர் காலங்களில் எதிர்கொள்வதற்கான திட்டங்க ளும் வடிவமைக்கப்பட உள்ளன. அத்தகைய திட்டமானது இந்தியா வுக்கே முன்மாதிரியாக இருக்கும்.

அதற்கேற்ப இத்தகைய முன் மாதிரி முயற்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எதிர்காலத்தில் இத்திட்டம் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்

LEAVE A REPLY