காவிரி நதிநீர் பிரச்சினையில் ஒருதலைபட்சமாக செயல்படும் மத்திய அரசு: சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி வேதனை

9
காவிரி

காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் நிலைப்பாட்டை கருத்தில் கொள்ளாமல் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல் படுவது வேதனை அளிக்கிறது என்று முதல்வர் கே.பழனிசாமி பேசினார்.

மேகேதாட்டு அணை விவ காரம் தொடர்பாக விவாதிக்க சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், முதல்வர் முன்மொழிந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பேசினர். அவர்களுக்கு பதிலளித்து முதல்வர் கே.பழனிசாமி பேசிய தாவது:

மத்திய நீர்வளக் குழுமம், தமிழகம் தெரிவித்த மறுப்பு களை பொருட்படுத்தாமல் மேகே தாட்டுவில் புதிய அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயா ரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களை யும் சமநிலையில் வைத்துப் பார்க்க வேண்டிய மத்திய அரசு, காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் நிலைப்பாட்டை பலமுறை எடுத்துரைத்தும் அதைக் கருத்தில் கொள்ளாமல் ஒருதலைபட்சமாக செயல்படுவது வேதனை அளிப்பதாக உள்ளது.

ஏற்கெனவே, பெங்களூரு நகரின் குடிநீர் தேவை உள்ளிட்ட பிற பயன்பாடுகளுக்காக 14.75 டிஎம்சி நீரை கர்நாடகாவுக்கு கூடுதலாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது. அதன்பின், பெங்களூருவின் குடிநீர் தேவைக்கென 67 டிஎம்சி கொள்ளளவு கொண்ட மேகேதாட்டு அணையைக் கட்ட கர்நாடகா முயற்சிக்கிறது. இது, தமிழகத்தை பாலைவனமாக்கும் உள்நோக்கம் கொண்ட செயலாகும். இதற்கு துணைபோகும் மத்திய நீர்வள குழுமத்தின் செயல் கண்டிக்கத்தக்கது.

இந்த அணை கட்டப்பட்டால் தமிழக மக்களின் வாழ்வாதாரமும், உரிமையும் கடுமையாக பாதிக்கப் படும். நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் ஆண்டுகளில், கடந்த காலங்களைப் போலவே காவிரி நீரை முழுமையாக கர்நாடகா பயன்படுத்தும் நிலை உருவாகும். கடந்த 1986-ம் ஆண்டில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து, காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அதன் இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தது, உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பைப் பெற்றது, அதன் பின்னர் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க முனைப்புடன் பாடுபட்டது என நீண்ட நெடுங்கால சட்டப் போராட் டத்துக்குப் பின் தமிழக மக்களின் அடிப்படை உரிமை நிலை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், மத்திய நீர்வளக் குழுமம், கர்நாடக அரசுக்கு வழங்கி யுள்ள அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத் தியும், மேகேதாட்டு மட்டுமின்றி கர்நாடகாவின் காவிரி படுகையில் எந்தவொரு இடத்திலும், எவ்வித கட்டுமானப் பணிகளும் மேற் கொள்ளக் கூடாது என கர் நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந் துள்ளேன். இதை அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டும்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு

தமிழக சட்டப்பேரவை கூட்டம் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக் கப்பட்டது.

காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணையை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருவது தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில், மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதிக்க கூடாது என்ற தீர்மானத்தை முதல்வர் பழனிசாமி முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பேசினர். இதற்கு முதல்வர் கே.பழனிசாமி பதிலளித்து பேசினார்.

இறுதியாக தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதற்கான தீர்மானத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து மறு தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவதாக பேரவை தலைவர் தனபால் அறிவித்தார்.

LEAVE A REPLY