தூத்துக்குடி வங்கியில் ரூ.1 கோடி நகை மோசடி : ஒருவர் கைது – ரூ.50 லட்சம் மீட்பு !

46

தூத்துக்குடி கனரா வங்கியில் போலி நகை வைத்து மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ 50 லட்சத்து 15 ஆயிரம் மீட்கப்பட்டிருக்கிறது.

தூத்துக்குடி மட்டக்கடை பகுதியில் இருக்கிறது கனரா வங்கி. அந்த வங்கியில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மேலாளர் தலைமையில் நகைகள் குறித்து ஆய்வு நடத்துவது வழக்கமாம். அந்த வகையில் சமீபத்தில் நடந்த ஆய்வின் போது 22 நபர்களின் பெயரில் வைக்கப்பட்ட 73 தங்க நகை கடன் கணக்குகளில் கண்ட நகைகள் முழுவதும் போலியானது என தெரியவந்தது. 
இது குறித்து வங்கியின் டிவிசனல் மேனஜர் இஸ்மாயில், தூத்துக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். நகைகளின் மதிப்பு ரூபாய் 1,00,15,000/- (ஒரு கோடியை பதினைந்தாயிரம்) என குறிப்பிட பட்டிருந்தது.
இந்த வழக்கு சம்பந்தமாக தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி முரளிரம்பா உத்தரவின் பேரிலும், தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் வழிகாட்டுதலின் பேரிலும் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திதீபன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.


இந்த நிலையில் அந்த வங்கியில் பணிபுரியும் தங்க நகை மதிப்பீட்டாளர் தூத்துக்குடி கீழ ரங்கநாதபுரம் சப்பாணிமுத்து மகன் சண்முகசுந்தரம் என்பவரை பிடித்து விசாரித்த போது, அவர் போலி நகை மோசடி செய்தது குறித்து ஒப்புக் கொண்டார்.

அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் கொடுத்த வாக்குமூலத்தில் தான் தனக்கு தெரிந்த பல்வேறு நபர்களின் பெயரில் வங்கியில் போலியன நகைகளை அடகு வைத்து வங்கியை ஏமாற்றி சுமார் ஒரு கோடி ரூபாய் வங்கி பணத்தை மோசடியாக பெற்று தனக்குள்ள கடன்களை அடைத்தும் தேவைகளை பூர்த்தி செய்ததாகவும் தெரிய வந்துள்ளது.

அவரின் ஒப்புதல் வாக்குமூலத்தின் பேரில் அவர் வங்கியில் போலியான நகைகளை அடமானம் பெற்ற வைத்து சண்முகசுந்தரம் கொடுத்திருந்த நபர்களிடமிருந்து பணம் ரூபாய் 50,15 ,000/- மீட்கப்பட்டுள்ளது.
இது குறித்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த மாவட்ட எஸ்.பி முரளிரம்பா, குறுகிய காலத்துக்குள் குற்றவாளியை கண்டுபிடித்து தொகையை மீட்ட ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் போலீஸாரை பாராட்டினார்.
மேலும் இந்த மோசடியில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என விசாரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY