ஆழ்வை கிராமச்சாவடி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

7
ஆழ்வை
தூத்துக்குடி மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பாபர் மசூதியை இடித்த முக்கிய குற்றவாளிகள் உட்பட 64பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கவேண்டும், பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆழ்வை கிராமச்சாவடி முன்பு  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் அத்தீக் பாஷா தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் சாதிக்அலி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மாநில பேச்சாளர் ஷூஐப் இப்னுபாரூக், இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் ரியாஸ்கான் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
இதில், மாவட்ட துணைச்செயலாளர் சுல்தான்பாசில், காயல்பட்டணம் நகர தலைவர் பாதுஷா மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இன்ஸ்பெக்டர் பத்மகுமாரி, சப்  -இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

LEAVE A REPLY