தொடரவேண்டும் டாஸ்மாக் சேவை – கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு

7

கோவில்பட்டி அருகே இளையரசனேந்தலில் திருட்டுத்தனமாக மதுபானம் விற்கும் கும்பல் தான் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை இயங்க கூடாது என தடுத்து வருவதாகவும், தொடர்ந்து அப்பகுதியில் டாஸ்மாக் இயங்க வேண்டும் என கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இளையரசனேந்தல் பகுதியை சேர்ந்த மக்களின் ஒரு பிரிவினர் மனு அளித்தனர்.

கோவில்பட்டி அருகே இளையரசனேந்தலிருந்து பிள்ளையார் நத்தம் செல்லும் சாலையில் கடந்த 2 வாரங்களாக அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையினால் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி கட்நத 3ந்தேதி இளையரசனேந்தல் பகுதிச் சேர்ந்த ஒரு பிரிவினர், அப்பகுதியில் டாஸ்மாக் கடை இயங்க கூடாது என்று மனு அளித்தனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பிரிவினர் இளையரசனேந்தலில் தொடர்ந்து அரசு டாஸ்மாக் மதுபானக்கடை இயங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில், இளையரசனேந்தலில் இருந்து பிள்ளையார்நத்தம் ரோட்டில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை எண் 10067 இயங்கி வருகிறது. எங்கள் பகுதியில் வேறு டாஸ்மாக் கடைகள் இல்லை. இங்கு டாஸ்மாக் அமைப்பதற்கு முன் நாங்கள் மதுபானம் வாங்க கோவில்பட்டி, எழயிரம்பண்ணை, திருவேங்கடம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டும். இதனால் எங்களுக்கு கூடுதலாக செலவு ஏற்பட்டு வந்தது.

மேலும், டாஸ்மாக் கடை இல்லாத காரணத்தால் எங்களது ஊரை சுற்றி திருட்டுத்தனமாக சிலர் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்து வந்தனர். தற்போது எங்கள் பகுதியில் கடை இயங்கி வருவதால் சரியான தொகை வழங்கி மதுபானங்களை வாங்குகிறோம்.

மோசடியான வகையில், திருட்டுத்தனமாக மதுபானம் விற்கும் கும்பல்தான் இவ்வாறு டாஸ்மாக் மதுபானக்கடையை நடத்தவிடாமல் தடுத்தி நிறுத்தி, அவர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஒன்றும் அறியாத சில நபர்களை அழைத்துக்கொண்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனவே, இளையரசனேந்தலில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். டாஸ்மாக் கடை வேண்டும் என்றும் ஒரு பிரிவினரும், வேண்டாம் என்ற ஒரு பிரிவினரும் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY