கோவில்பட்டியில் இந்து மக்கள் கட்சியினர் நூதன போராட்டம்

8

கோவில்பட்டியில் டிச.6-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு டிஎஸ்பியிடம் இந்து மக்கள் கட்சி சார்பில் மனு வழங்கப்பட்டது. ஆனால், போலீஸார் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து இந்து மக்கள் கட்சியினர் நகர தலைவர் தளவாய் ராஜ் தலைமையில், கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவிலில் அம்மனிடம் மனு வழங்கும் போராட்டம் நடத்தினர். தென் மண்டல இளைஞரணி செயலாளர் மாரிமுத்து, மாநில துணை தலைவர் குணசீலன், மாநில பொதுச்செயலாளர் செல்வசுந்தர் மற்றும் நிர்வாகிகள் கோவிலுக்கு வந்து தட்டில் பூ, பழங்கள் மற்றும் கோரிக்கை மனுவை வைத்து அம்மன் சன்னதியில் இருந்த அர்ச்சகரிடம் வழங்கினர்.மனுவில், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அருள் புரிய வேண்டும். ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுத்த தமிழக அரசு மற்றும் காவல்துறையினரை வலிமைப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். இந்து மக்கள் கட்சியினர் போராட்டத்தினையொட்டி கோவில் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

LEAVE A REPLY