பைக்கில் வந்த கோவில்பட்டி தம்பதியை அரிவாளால் வெட்டிவிட்டு 5 பவுன் நகை பறிப்பு – போலீசார் விசாரணை

16
பைக்

கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன்(48). இவர் மாவு மில் வைத்து நடத்துகிறார். இவருடைய மனைவி வனிதா(36). தம்பதி இருவரும் நேற்று ராஜபாளையம் அருகே தனது உறவினர் இல்ல நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுவிட்டு ஊருக்கு பைக்கில் திரும்பியுள்ளனர். நெல்லை மாவட்டம் பருவக்குடி விலக்கு அருகே உள்ள மலையடிப்பட்டி பகுதியில் வந்தபோது, ஹெல்மேட், முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 3 பேர் தம்பதி வழிமறித்து, வனிதா கழுத்தில் அணிந்திருந்த நகைகளை கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் தர மறுக்கவே , மர்ம நபர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த அரிவாள்,  கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளனர். தம்பதி இருவரும் எதிர்த்து போராடியுள்ளனர். அப்போது அந்த வழியாக பஸ் வருவதைக் கண்ட மர்ம நபர்கள் தங்கள் கொண்டு வந்த கத்தியை விட்டு, விட்டு, வனிதா கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க நகை மற்றும் கவரிங் நகை ஆகிவற்றை மட்டும்  பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். காயமடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர்.

LEAVE A REPLY