அதிக வருமானம் ஈட்டும் 100 இந்தியர்கள் பட்டியல்: முதலிடத்தில் சல்மான், 4-ம் இடத்தில் தீபிகா

9
இந்தியர்கள்

ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ் வெளியிட்டுள்ள 2018 ஆம் ஆண்டுக் கான அதிக வருமானம் ஈட்டும் 100 இந்தியப் பிரபலங்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் சல்மான் கான் உள்ளார்.

ஃபோர்ப்ஸ் இதழ் ஓராண்டு வருவாய் மற்றும் மக்கள் மத்தி யில் உள்ள செல்வாக்கு அடிப்படை யில் 100 இந்தியப் பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சினிமா, விளையாட்டு உள் ளிட்ட துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இந்த ஆண்டும் சல்மான்கானே இடம்பிடித்துள்ளார். இவருடைய ஆண்டு வருமானம் ரூ.253 கோடி ஆகும். அடுத்த இரண்டு இடங் களில் விராட் கோலி, அக்‌ஷய் குமார் உள்ளனர். இவர்களின் ஆண்டு வருமானம் முறையே ரூ.228 கோடி, ரூ.185 கோடி ஆகும்

நடிகை தீபிகா படுகோன் சென்ற ஆண்டு 11ம் இடத்தில் இருந்தவர் இந்த ஆண்டு ஏழு இடங்கள் முன் னேறி நான்காம் இடத்தைப் பிடித் துள்ளார். இவருடைய ஆண்டு வரு மானம் ரூ. 112.8 கோடி. ஷாருக்கான், அமீர்கான், அமிதாபச்சன் உள்ளிட்ட பல ஆண் பிரபலங்களைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறி யுள்ளார். கிரிக்கெட் வீரர் தோனி 5ம் இடத்தில் உள்ளார்.

ஆறு மற்றும் ஏழாம் இடங்களில் அமீர்கானும், அமிதாபச்சனும் உள்ளனர். ரண்வீர்சிங் எட்டாம் இடத்தில் உள்ளார். இசையமைப் பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 11-வது இடத்தில் உள்ளார்.

LEAVE A REPLY