நாசரேத் சாலமோன் பள்ளியில் மறைந்த முதல்வருக்கு அஞ்சலி!

24
நாசரேத்

நாசரேத் சாலமோன் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் மறைந்த முன்னாள்; முதல்வர் செல்வி ஜெயலலிதாவிற்கு இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைவர் சத்தியவதி மனோகரன் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் மறைந்த முதல்வரின் வாழ்க்கை குறித்து பேசினார். பள்ளி முதல்வர் அனி ஜெரால்டு முன்னிலை வகித்தார். பள்ளி மாணவர் களுக்கு மறைந்த முதல்வர் குறித்து பேச்சுப் போட்டி நடைபெற்றது. மாணவிகள் செல்வி ஜெயலலிதாவைப் போல் வேடமணிந்து வந்திருந்த னர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. உதவி முதல்வர் மகிலா சரவணன் நன்றியுரை ஆற்றினார்.    விழா ஏற்பாட்டினை ஆசிரியர்கள் செய்திருந்தனர்லி!

LEAVE A REPLY