தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான அமர்வு கைப்பந்து போட்டி – லூசியா மாற்றுத்திறனாளி சங்கம் ஏற்பாடு !

31

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான அமர்வு கைப்பந்து போட்டி நடந்தது. லூசியா மாற்றுத்திறனாளி சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

தூத்துக்குடியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு லூசியா மாற்றுத்திறனாளி சங்கம் சார்பில் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான அமர்வு கைப்பந்து போட்டி தூத்துக்குடி மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இதில் தமிழகத்தை சேர்ந்த கோயம்புத்தூர், இராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தர்மபுரி, தூத்துக்குடி, உள்ளிட்ட ஒன்பது அணிகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிகள் லீக் முறையில் நடைபெற்றது. போட்டிக்கான ஆரம்ப விழாவில் தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஜெயசீலி தலைமையில் லசால் மேல்நிலைபள்ளி தாளாளர் அருட்சகோதரர் பிரடீ அவர்கள் விழாவினை தொடங்கி வைத்தார். அருட்தந்தை மெரிஸ் அவர்கள் முன்னிலையில் வகித்தார்.

இந்த போட்டியின் இறுதியில் 24:17 – 24:21 என்ற புள்ளி கணக்கில் கோயம்புத்தூர் அணி முதலிடமும் கன்னியாகுமரி அணி இரண்டாம் இடமும் திருநெல்வேலி வடக்கு அணி மூன்றாவது இடத்தையும் தூத்துக்குடி தெற்கு அணி நான்காவது இடத்தையும் பிடித்தது வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் ஏழுஆயிரம் மற்றும் வெற்றிக் கோப்பையும் இரண்டாம் பரிசாக ரூபாய் ஐந்தாயிரம் மற்றும் வெற்றி கோப்பையும் மூன்றாவது பரிசாக ரூபாய் மூன்றாயிறம் மற்றும் வெற்றிக் கோப்பையும் நான்காவது பரிசாக ரூபாய் இரண்டாயிரம் மற்றும் வெற்றிக் கோப்பையும் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் மறைவட்ட முதன்மை குரு ரோலிங்டன் தலைமை தாங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் ரமேஷ்குமார் அருட்தந்தை பெஞ்சமின், சதீஷ், சுசீலன்,ஆகியோர் முன்னிலை வகித்தார். போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ஜான் வசீகரன், தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஜெயசீலி மற்றும் ஜோசப் அன்சலம் பரிசுகளை வழங்கினார்கள்.

போட்டியின் நடுவர்களாக பாலகிருஷ்ணன், கோபி, நேரு செயல்பட்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை லூசியா மாற்றுத்திறனாளி இல்ல இயக்குனர் கிராசிஸ் மைக்கில் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

LEAVE A REPLY