பிரதமர், கவர்னர், பத்திரிக்கை உரிமையாளர்கள் மீது தரம்தாழ்ந்த விமர்சனம் – வரம்பு மீறுகிறார் வைகோ ?

39

பிரதமர், கவர்னர், பத்திரிக்கை மற்றும் மீடியாக்களின் உரிமையாளர்களை தரம் தாழ்த்தி விமர்சனம் செய்து வரம்பு மீறியிருக்கிறார் வைகோ.

ஒரு சிலர் அரசியலுக்குள் நுழைந்ததுமே முதலமைச்சர் போன்ற முக்கிய பதவிகளை பெற்றுவிடுவர். ஆனால் வேறு ஒரு சிலருக்கோ ஊர் ஊராக சென்று அழுது புலம்பினாலும் அது கிடைப்பதில்லை.

இதில் இரண்டாவது வகையை சேர்ந்தவர்தான் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ. நாற்பது ஆண்டுகளுக்கு மேல் அரசியல்வாதியாக வலம் வரும் வைகோக்கு முதலமைச்சர் பதவி காணல் நீராகவே இருந்து வருகிறது. எம்.பி ஆக மட்டுமே முடிந்திருக்கிறது.

நினைவாற்றல் பேச்சாற்றல் இருந்தும் அவரால் ஏன் முதலமைச்சர் பொறுப்புக்கு வரமுடியவில்லை? என்று பலரும் கேட்கிறார்கள். அதற்கு சிலர், ’உணர்ச்சி வசப்பட்டு பேசுபவர்களால் எதையும் பெரிதாக சாதிக்க முடியாது’ என்கிறார்கள்.

‘உலக விஷயங்களை தெரிந்து கொள்ள இன்றைய இளைஞர்கள் ஆவலாக இருக்கிறார்கள். அவர்களிடம் உலகலாவிய பார்வை இருக்கிறது. அவர்களிடம் திராவிடம், இந்தி எதிர்ப்பு என்பது போன்ற கோஷம் எடுபடவில்லை. இது போன்ற கொள்கையை ஆதரிக்க கூடியவர்கள் குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே.

அதுபோல், ‘தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைபுலி இயக்கத்தை ஆதரிப்பதும் அடிக்கடி இந்திய தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் பிரிவினை வாதம் பேசுவதுமே வைகோவை முக்கிய இடத்துக்கு போகவிடாமல் தடுக்கிறது. இவரின் உணர்ச்சி வசப்பட்ட பேச்சே இவருக்கு முதல் எதிரி. உணர்ச்சிவசப்பட்டு பேசுகிற சாக்கில் வேணுமென்றே பேசுவதும் இவரின் வழக்கம் என்கிறார்கள்.

சில நேரங்களில் உச்ச பதவியில் இருப்போரை அளவுக்கு அதிகமாக விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்திவிடுகிறார். இதை அவர் வேணுமென்றே செய்கிறார் என்பதை பெருவாரியான மக்கள் யூகித்துவிடுகிறார்கள். அதனாலேயே இவரை மக்கள் குறிப்பிட்ட அளவுக்கு மேலே தூக்குவதில்லை.
அதுபோலவே இன்று (2.12.2018) கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவிலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த வைகோ, மணமக்களை வாழ்த்தி பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, ’’ஆளுநர் பதவியை துஸ்பிரயோகம் செய்து வருகிற, அரசியல் அமைப்பு சட்டத்தின் 161 பிரிவை மதிக்காத, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோஹாய் அவர்களின் தீர்ப்பை உதாசினப்படுத்திவிட்டு, மூன்று வேளாண்மை கல்லூரி மாணவிகளை காயத்திரி, கோகிலவாணி,ஹேமலதா ஆகிய கல்லூரி மாணவிகளை ஜெயலலிதாவுக்கு ஒரு வருஷம் தண்டனை என்பதற்காக தலைமை உத்தரவின் பேரில் தீ வைத்து பஸ்ஸை கொளுத்தி அவர்கள் கதற கதற பெட்ரோல் ஊத்தி கொன்ற கொடிய பாவிகள் மூன்று பேரை உடனடியாக விடுதலை செய்த கவர்னர்,

ராஜீவ்காந்தி படுகொலையில் எள்ளவும் தொடர்பில்லாத நிரபராதிகளை 27 ஆண்டுகள் மரண வேதனையில் துடிதுடித்துப்போனவர்களை விடுதலை செய்க என்று தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்று தலைமை நீதிபதி சொன்னதற்கு பிறகும் முறைகேடாக மத்திய உள்த்துறை அமைச்சகத்துக்கு தகவல் கேட்ட குற்றத்துக்கு கண்டம்டாப் கோர்ட்ல இந்த கவர்னரை கேஸ் போடனும்.

இந்த கவர்னர் தமிழ்நாட்ல இருக்க கூடாது. ராஜபவனத்திலும் இருக்க கூடாது. எப்படி பிரதமர் இந்த நாட்டுக்கு சாபக்கேடுன்னு சொல்றேனோ தமிழ்நாட்டுக்கு சாபக் கேடு கவர்னர் பண்வாரிலால் புரோஹித். பத்திரிக்கை சுதந்திரத்தை கழுத்தை நெரிக்க நக்கீரன் கோபால் மேல தேச துரோக வழக்கு போட்டு கைது பண்ணாங்க. நான் நேர போலீஸ் ஸ்டேன் உள்ளே போய் மறியல் பண்ணேன்.

அன்னைக்கு ஜட்ஜி அவரை விடுதலை பண்ணிட்டாரு அவரை வீட்டுக்கு போக சொல்லிட்டாரு. இந்த கவர்னரு தொழில் அதிபர்களே வாங்க. நான் உங்களுக்கு எல்லாத்துக்கும் ஆரேஞ் பண்ணி கொடுக்கிறேன். இதாய்யா வேலை புரோக்கர் வேலையா? நீ கவர்னரா நீ புரோக்கராயா நீ ஊர் ஊரா போய் கலெக்டரே வா எஸ்பியே வா அப்படின்னு கூப்பிட்டா இங்கே ஒரு கவர்ன்மெண்ட் இருக்கே?.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி கவர்ன்மெண்ட் ஒன்ணு இருக்குன்னு தெரியாதா உனக்கு? இங்கே கவர்னர் ஆட்சியா நடக்கிறது. அண்ணா தி.மு.க ஆட்சி நடக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி சீப் மினிஸ்டரா இருக்கிறாரு. கவர்னர் ஆட்சி நடந்தா நீ ஊர் ஊராய் போய் கலெக்டரை பார் எஸ்பியை பார். எப்படி நீ போகலாம்?

இதை கேட்க நாதியில்லைன்னு நினைக்காதே. கவர்னர் பெயரை சொன்னா பிடிச்சி உள்ளே போட்டுவிடுவான்னு பூரா பத்திரிக்கை முதலாளிகளையும் வாரத்துக்கு ஒருநாள் காலையில சாப்பிட கூப்பிடுறாருய்யா. பத்திரிக்கை முதலாளிக தொலைகாட்சி முதலாளிக இதுக்குத்தான் நான் அட்டாக் பண்ணாலும் பலபேரு பயந்துகிட்டு போடுறது கிடையாது.

நான் அதைபற்றி கவலைப்படலை. கவர்னர் தமிழ்நாட்ல இருக்க கூடாது. இதுதான் நாளைய போராட்டம். பல்லாயிரக்கணக்கான தோழர்கள் வருவார்கள். 70 அமைப்புக்களை சேர்ந்தவர்கள் வருகிறார்கள். குறிப்பாக தி/மு.க தலைவர் ஸ்டாலின் முழுஆதரவை தருவதாக கூறியிருக்கிறார். அதுபோல மா.கம்யூனிஸ்ட், இ.கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைகட்சி, மே 17 இயக்கம் குறிப்பாக திராவிடர் கழகம். நாங்களும் திராவிடர் கழகமும் சேர்ந்துதான் ஏற்பாடு செய்கிறோம்.
70 அமைப்புகள் இதில் திரல்கின்றனர் பல்லாயிரக்கணக்கில் திரல்வார்கள் போலீஸுக்கு சொல்லீர்றேன் கமிஷ்னருக்கு. நாங்க போராட்டம் நடத்துகிற இடத்து வரைக்கு விட்டால் பிரச்னை இல்லை. தடுத்து ரோட்டுக்கே வரவிடாமல் தடுத்தால் மெரினாவில் ஜல்லிக்கட்டில் என்ன நடந்ததோ அது நடக்கும்ன்னு இப்பவே போலீஸுக்கு எச்சரிக்கை செய்கிறேன்’’ என்றார் வைகோ.

’நாளை (3.12.2018) நடக்க இருக்கிறது என சொல்லப்படுகிற கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்துக்கு வைகோ விளம்பரம் தேடுகிறார்’ என்கிறார்கள் அரசியல் அறிந்தவர்கள்.

’இதுபோன்று உச்ச பதவிகளில் இருப்போரை கடுமையாக சாடுவதும் பின்னர் அவர்களிடம் நட்பு பாராட்டுவதும் வைகோவுக்கு வழக்கம்தான். ஆனால் இதை இப்படியே விட்டால் நாட்டு நலனுக்கு நல்லது அல்ல. இந்த முறை அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள் !

LEAVE A REPLY