2.0 – நடுநிலை.காம் – விமர்சனம்

29

எதாவது ஆங்கில சேனலை திறந்தால் பிரமிக்கிற வகையில் காட்சி அமைப்புடன் சினிமா படம் ஓடும். அதை பார்த்து, ‘இதெல்லாம் இந்த இங்கிலிஸ் காரர்களுக்குத்தான்யா முடியும்’ என நம்மாளுங்க புலம்புவதுண்டு. அந்த குறையை போக்கியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

ஷங்கர் படம் என்றாலே அது பிரம்மாண்டமாகத்தான் இருக்கும் என யூகிக்க முடியும். அந்த அளவிற்கு அவர் பல வெற்றி படங்களை வித்தியாசமாக கொடுத்திருக்கிறார். அதையும் தாண்டி உலக அளவில் பேசப்படுகிற படமாக தற்போது வெளி வந்திருக்கும் 2.0 வை உருவாக்கியிருக்கிறார் அவர்.

சாதாரணமான செல்போன் டவரை மையமாக வைத்த கதைதான் அது. ஆனால் அதற்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது என்பதை விவரித்திருக்கிறார் ஷங்கர். செல்போன் மற்றும் அதற்கான செல்போன் டவர் மூலம் பறவை இனம் அழிந்து போகிறது என சொல்கிறது இந்த கதை. இந்த தகவல் ஏற்கனவே வாட்ஸ் அப் மூலம் சொல்லப்பட்டிருக்கிறது என்றாலும் இந்த படத்தில் சென்ட்டிமென்ட், அடிதடி,கிராஃபிக்ஸ் என கலந்து சொன்ன விதம் நன்றாக இருக்கிறது.

உலகில் பத்தாயிரம் தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது என்றால் ரஜினி, அக்ஸ்யகுமார், ஷங்கர் கொண்ட மூவர் கூட்டணிக்கு உண்மையில் பெருமையே. எந்திரனின் இரண்டாவது பாகமாக வடிவமைக்கப்படுவதால் எந்திரன் கேரக்டரான ‘சிட்டி’ இதிலும் இடம்பெறுகிறார்.

எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் தூண்டும் வகையில் சிட்டியாக வலம் வருகிறார் ரஜினி. சிட்டிக்கு ஜோடியாக அதேபோல் எந்திரனின் ரோபோ கேரக்டரில் இடம்பெற்றிருக்கிறார் கதாநாயகி எமிஜாக்ஸன். உண்மையில் பொம்மையாகவே காட்சியளிக்கும் இவரின் கேரட்டர் கடைசியில் சிட்டிக்கே உயிர் கொடுக்கும் போது தியேட்டரே அமைதிமயம்.

இடைவேளைக்கு பிறகு அக்ஸயகுமார் முக்கிய இடம் பிடிக்கிறார். பறவை இன ஆர்வலரான இவர், செல்போன் டவர்களாலும் சென்போன்களாலும் பறவை இனம் அழிகிறது என சம்மந்த பட்ட நிறுவனங்களிடமும் அரசு துறையிலும் சொல்லி பார்க்கிறார். தன்னிடம் உள்ள பறவைகள் கண்ணுக்கு எதிரே இறந்து போவதை பொறுத்துக் கொள்ளாமல் செல்போன் டவரில்லேயே தூக்கு போட்டு தற்கொலை செய்துவிடுகிறார்.

ஒருவர் உடலை சுற்று ’ஆரா’ உண்டு அது அவர் வாழும் போதும் சரி இறந்தபிறகும் சரி, குறிப்பிட்ட அளவில் இருக்கும் என்பதை அறிவியலுக்கு அப்பாற்பட்டு தைரியமாக சொல்லியிருக்கிறார் ஷங்கர். இறந்து போன அக்ஸயகுமார் உடலை சுற்றிய ஆராவோடு அவர் வளர்த்து இறந்து போன பறவைகளின் உடலை சுற்றியிருந்த ஆராவும் சேர்ந்து அக்ஸயகுமார் உருவமும் பறவையின் உருவமும் சேர்ந்து புதிய பறவையின் உருவம் உருவாகுகிறது.

செல்போன்களை கவர்ந்து இழுக்கும் அந்த உருவம், செல்போன், டவர் வைத்திருப்போரை பலி வாங்குகிறது. அதிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்கு எந்திரனின் சிட்டி உருவாக்கப்படுகிறது. சிட்டியாக வலம் வரும் ரஜினியும் ஆக்ரோஷ பறவையாக வலம் வரும் அக்ஸயகுமாரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஆங்கில படத்துக்கு நிகராக கிராஃபிக்ஸ், சவுண்ட்ஸ் எபெக்ட் எல்லாம் நேரம் போவதையே தெரியாமல் ஆக்குகிறது. பறவை இன ஆதரவாளரான அக்ஸயகுமாரை வில்லனாக பார்க்கும் போது, அவரை அழிக்க முயற்சி செய்யும் சிட்டியான ரஜினியின் நடவடிக்கை சரியானதா? என கேள்வி கேட்கும் சூழ்நிலை உருவாகுகிறது.

அப்படிபட்ட கேள்விக்கு பதில் சொல்லும் வகையில் கடைசியில் ரஜினி விளக்கம் அளிக்கிறார். அதாவது நியாயமான கோரிக்கைகள் நிராகரிக்கப்படும் போது இப்படித்தான் ஆபத்தான சூழ்நிலை உருவாகிவிடும்’ என்கிற அர்த்தத்தில் விளக்கமளிக்கிறார் ரஜினி. அதன் பிறகுதான் பார்வையாளர் நிம்மதி அடைகிறார்கள்.

பெரிய எதிர்பார்ப்போடு படம் பார்க்க போனால், 2.0 சாதாரண படமாக தெரியும். சாதாரணமாக 2.0 வை பார்க்க போனால் பிரம்மாண்டமாக தெரியும். மற்ற உள்நாட்டு படங்களோடு 2.0-வை ஒப்பிட்டுபார்த்தால் இது ஒரு பிரம்மாண்ட படம்தான் .

உலகம் முழுவதும் 10 ஆயிரம் தியேட்டர்களில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதே ஒரு சாதனைதான் ! – நடுநிலை.காம்

LEAVE A REPLY