புதுசு புதுசா அவுட் ஆகிறார்: கே.எல்.ராகுலுக்கு பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கடும் எச்சரிக்கை

5
புதுசு

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டிசம்பர் 6ம் தேதி அடிலெய்டில் முதல் டெஸ்ட் தொடங்கும் நேரத்தில் இந்தியாவை எப்படியாவது மண்ணைக் கவ்வச் செய்து இழந்த தங்கள் மதிப்பை மீட்டெடுக்க ஆஸி. அணியினர் எந்த உச்சம் வரையும் செல்லலாம் என்ற சூழலில் இந்திய பேட்ஸ்மென்களில் கே.எல்.ராகுலின் ஆட்டம் கவலைக்குரியதாக மாறியுள்ளது.

சிட்னியில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணியுடனான ’பயிற்சி ஆட்டம்’ என்ற பெயரிலான ஒப்புக்குச் சப்பாணி ஆட்டத்திலேயே கே.எல்.ராகுல் 3 ரன்களில் ஆட்டமிழந்திருப்பது, இந்திய அணி நிர்வாகத்துக்கு அணித்தேர்வு பிரச்சினைகளைக் கொடுத்துள்ளது. மேலும் பிரித்வி ஷா, கோலி, ரஹானே உட்பட 5 பேட்ஸ்மென்கள் அரைசதம் அடிக்க, இந்த அனுபவமற்ற கத்துக்குட்டி பந்து வீச்சிலும் ராகுல் 3 ரன்களில் ஆட்டமிழந்தது, பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கருக்கு நல்லதாகப் படவில்லை.

அவர் அவுட் ஆன ஷாட் சஞ்சய் பாங்கருக்குத் திருப்தி அளிக்கவில்லை.

 

“அவர் நல்ல நிலையில்தான் உள்ளார். அவுட் ஆவதற்கு புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்து கொள்கிறார் என்பதுதான் பிரச்சினை. இன்று கூட பந்து தள்ளியே சென்றது, உடலுக்கும் பந்துக்கும் இடைவெளி அதிகம். ஆடினார் ஆட்டமிழந்தார். ஆனால் எங்களுக்கு என்ன நம்பிக்கை என்றால் ஒரு இன்னிங்ஸ்தான் அவர் பார்முக்கு வரத் தேவை. அவரது திறமை என்னவென்பது எங்களுக்கு தெரியும். அவர்

அவர் இன்னமும் இளம் வீரர் அல்ல. ஆஸி.க்கு 2வது முறையாக வந்துள்ளார். மேலும் 30 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை ஆடியுள்ளார். எனவே அவருக்குப் பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்புடன் அவர் ஆட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அணியில் அவரது பங்கைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

தொடக்க வீரர் இடம் மற்றும் நம்பர் 6 இடங்கள் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை” என்று ராகுலுக்கு எச்சரிக்கை விடுத்தார் சஞ்சய் பாங்கர்.

LEAVE A REPLY