திருச்செந்தூர் முருகன் கோவில் நவம்பர் மாத உண்டியல் காணிக்கை ரூ. 2 கோடியே 9 லட்சத்து 273 !

9

திருச்செந்தூர், நவ. 28
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நவம்பர் மாதம் உண்டிலில் காணிக்கையாக ரூ.2 கோடியே 9 லட்சத்து 273 கிடைத்திருக்கிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாதந்தோறும் இறுதியில் உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். நவம்பர் மாதத்திற்கான உண்டியல் எண்ணும் பணி நேற்று(27.11.2018) நடந்தது. கோயில் இணை ஆணையர் பாரதி தலைமை வகித்தார். தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணிய ஆதித்தன், நாகர்கோவில் உதவி ஆணையர் ரத்தினவேல், கோயில் உதவி ஆணையர் செல்வராஜ், முதுநிலை கணக்கு அலுவலர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோயில் பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் 200 உண்டியல் எண்ணும் பணியில் ஈடுப்பட்டனர். இதில் நிரந்தர உண்டியல்கள் மூலம் ரூ.2 கோடியே 48 ஆயிரத்து 386ம், யானை பராமரிப்பு உண்டியலில் ரூ.70 ஆயிரத்து 723ம், கோசாலை உண்டியல்களில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து 605ம், கோயில் அன்னதானம் உண்டியலில் ரூ.6 லட்சத்து 51 ஆயிரத்து 783ம், சிவன் கோயில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.8 ஆயிரத்து 776ம் வசூலானது. மொத்தம் உண்டியல்கள் மூலம் ரூ.2 கோடியே 9 லட்சத்து 273 கிடைத்தது.
இதில் தங்கம் ஆயிரத்து 557 கிராம், வெள்ளி 19 ஆயிரத்து 298 கிராம், பித்தளை 24 ஆயிரத்து 360 கிராமும் கிடைத்தது.

இந்த நவ. மாதம் தான் கந்த சஷ்டி திருவிழா 7 நாட்கள் நடந்தது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY