அஜித் ஜெர்மனி சென்ற காரணம்: வைரலாகும் புகைப்படம்

3
அஜித் ஜெர்மனி

ஒரு பக்கம் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்க, இன்னொரு பக்கம் அஜித்குமார் தனது ஏரோமாடலிங் ஆர்வத்துக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கிறார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் நான்காவது படம் விஸ்வாசம். படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களை பெரிதாக திருப்திபடுத்தாத நிலையில், சில நாட்களுக்கு முன் வெளியான மோஷன் போஸ்டர் அஜித் ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்தில் அஜித்துக்கு இரண்டு கெட்டப்கள் இருப்பது உறுதியாகியுள்ளது.

விஸ்வாசம் வேலைகள் முடிந்து அஜித் குடும்பத்துடன் சமீபத்தில் கோவா சென்று வந்தார். தொடர்ந்து அவர் ஜெர்மனிக்கும் சுற்றுலா சென்றார் என்று செய்திகள் வந்தன.

ஆனால் அவர் ஜெர்மனி சென்றது வேறொரு காரணத்துக்காக என்பது சமீபத்தில் வெளியான புகைப்படத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

ஜெர்மனியில் நடைபெறவுள்ள ஒரு தொழில்நுட்ப மாநாட்டில் பங்கேற்க அஜித் சென்றுளார். வாரியோ ஹெலிகாப்டர் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிர்ஸ்டர் ஸாட்னருடன் இந்த மாநாட்டில் அஜித் பங்கேற்கிறார். இந்தியாவில் ஏரோ மாடலிங் துறைக்கான அங்கீகாரத்துக்காகவே அஜித்தின் இந்த சந்திப்பு எனக் கூறப்படுகிறது.

இந்தியாவில் பைலட் லைசன்ஸ் வைத்திருக்கும் ஒரு சில நடிகர்களில் அஜித்குமாரும் ஒருவர். சமீபத்தில் எம்ஐடி பல்கலை மாணவர்கள் குழு ஒரு போட்டியில் பங்கேற்க அந்த குழுவுக்கு ஆலோசகராகவும் அஜித் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY