தோனி உலகக்கோப்பைக்குத் தேவை;கோலியை நம்பி அணி இல்லை: ராபின் சிங் அதிரடி

8
தோனி

019-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தோனி கண்டிப்பாக இடம் பெற வேண்டும். அதேசமயம், இந்திய அணி முழுமையாக விராட் கோலியைச் சார்ந்து இல்லை என்று முன்னாள் இந்திய வீரர் ராபின் சிங் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டிக்காக இந்திய அணி தன்னை தயார்படுத்தத் தொடங்கிவிட்டது. மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்கள் அனைத்தும் இந்திய அணி தன்னைத் தயார்படுத்திக்கொள்ளவும், திறமையான 15 வீரர்களே அடையாளம் காணும் களமாகவும் அமைந்துள்ளது என்று பயிற்சியாலர் ரவிசாஸ்தரி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் தோனி நீக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறுமுன்னாள் வீரர்கள் அதிர்ச்சி தெரிவித்தபோதிலும், ஒருநாள் போட்டி உலகக்கோப்பைக்கு தோனி இல்லாமல் அணியைத் தேர்வு செய்யக்கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், தோனியின் பேட்டிங் இந்த ஆண்டில் மிகவும் மோசமாக அமைந்திருந்ததை யாராலும் மறுக்க முடியாது. 2018-ம் ஆண்டில் 20 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய தோனி 275 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். சராசரியாக 25 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.

ஆனாலும், 2019-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டிக்கு தோனி இல்லாத அணி நினைத்துப்பார்க்க முடியவில்லை. தோனியை கண்டிப்பாக அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்ற குரல் நாளுக்கு நாள் வலுத்துவரும் நிலையில், தற்போது முன்னாள் வீரர் ராபின் சிங்கும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் சிங் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

2019-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் கண்டிப்பாக தோனி இடம் பெற வேண்டும். ஏனென்றால், ரிஷப் பந்த் ஒருநாள் போட்டிகளில் அனைத்து ஆட்டங்களிலும் தனக்குரிய வாய்ப்பைப் பயன்படுத்துவார் என்று கூற இயலாது. அதற்கான அனுபவம் அவருக்கு இல்லை. ஆனால், தோனிக்கு ஏராளமான அனுபவம் இருக்கிறது, ஆதலால், அவர் அணியில் இடம்பெறுவது அவசியம். உலகக்கோப்பையில் தோனி இல்லாத இந்திய அணியை நினைக்க கடினமாக இருக்கிறது.

இந்திய அணியில் பந்துவீச்சு மிகப் பிரமாதமாக இருக்கிறது. உலகக்கோப்பைப் போட்டி நெருங்க நெருங்க, பந்துவீச்சில் இன்னும் பட்டைத்தீட்டி, ரன்கள கொடுப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

உலகக்கோப்பை வெல்லும் அணிகள் என்று கணிக்கும் போது இந்திய அணி முன்னணியில் இருக்கிறது. இங்கிலாந்து அணியும் கடும் சவால் விடுத்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக இங்கிலாந்து அணியினர் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். கடந்த 1999-ம் ஆண்டு நான் இங்கிலாந்தில் விளையாடி இருக்கிறேன். அங்கு கிரிக்கெட் விளையாடும் சூழல் மிகச்சிறப்பாக இருக்கும். பேட்ஸ்மேனுக்கு நன்கு ஆடுகளம் ஒத்துழைக்கும். அதேசமயம், பந்துவீச்சும் எடுபடும். பந்துவீச்சாளர்கள் வித்தியாசமாக பந்துவீச வேண்டும்.

இந்திய அணியின் பேட்டிங் வலிமையாகவே இருக்கிறது. எல்லோரும் சொல்வதைப் போல் இந்திய அணி கேப்டன் கோலியை மட்டும் நம்பி இல்லை, கோலியை சார்ந்தும் இல்லை. கோலியைத் தவிர்த்து சிறப்பாக விளையாடக்கூடிய தேவைப்படும் நேரத்தில் அதிரடியாக ஆடக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள்.

ஆதலால், கோலி பேட்டிங்கை நம்பி இந்திய அணி இல்லை என்று நான் நினைக்கிறேன். ஆசியக் கோப்பைப் போட்டியில் கோலி இல்லாமல் வென்றோம். ஆதலால், வலிமையான பேட்டிங் நம்மை முன்னெடுத்துச் செல்ல உதவும். கோலி சிறந்தபேட்ஸ்மேன்தான் என்பதை மறுக்கவில்லை, அதேசமயம் இளைஞர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெல்வதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இதை இந்திய அணி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் . இவ்வாறு ராபின் சிங் தெரிவித்தார்.

LEAVE A REPLY