திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

15
திருச்செந்தூர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தீபா விழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. அதிகாலை 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. காலை 6.15 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. காலை 9 மணிக்கு 108 மகாதேவர் முன்பு சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை 10.30 உச்சிகால அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது.

மாலையில் இரண்டாவது பிரகாரத்தில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து அனைத்து சன்னதிகளிலும் நாரணி தீபம் ஏற்பட்டது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து அங்கு நாரணி தீபம் ஏற்பட்டது. பின்னர் இரவு 7.10 மணிக்கு கடற்கரையில் உள்ள 30 அடி உயர சொக்கப்பனையில் நாரணி தீபம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. பின்னர் சண்முகவிலாச மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்கதேரில் எழுந்தருளி கிரி பிரகாரம் வீதி உலா நடந்தது.


இந்நிகழ்ச்சியில் தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணிய ஆதித்தன், உள்துறை சூப்பிரெண்ட் சொர்ணம், மானேஜர் விஜயன், பி.ஆர்.ஒ. மாரிமுத்து, மணியம் சதாசிவம், ஒதுவார் கோமதிசங்கர், சந்தணம் செல்லப்பா உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் கோயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீஜாராணி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் மேரி, சுப்பிரமணியன், பாஸ்கரன் உட்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

LEAVE A REPLY