கஜா புயல் பாதிப்பு: அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ சார்பில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைப்பு

12
கஜா

கஜா புயலால் நாகப்பட்டிணம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு தரப்பினரும் நிவாரண பொருள்களை அனுப்பி வைத்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக செய்தி மற்றுமு; விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் செ.ராஜீ சார்பில் சுமார் 30லட்ச ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருள்களாக துணிகள், அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, பாய், போர்வை, பிஸ்கட், ரஸ்க், தண்ணீர் பாட்டில்கள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களுடன் நிவாரண பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு இருந்து லாரி நிவாரணப்பொருள்களுடன் கிளம்பி சென்றது. இங்கிருந்து செல்லும் நிவாரண பொருள்கள் தஞ்சாவூர் பேராவூரணி பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அப்பகுதியில் உள்ள மக்களுக்கு வழங்கப்படுவுள்ளதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

நிவாரண பொருள்கள் வழியனுப்பும் நிகழ்ச்சியில் நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைப்பாண்டியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஜெமினி(எ) அருணாச்சலசாமி, அமைப்புச்சாரா ஓட்டுநர் அணி துணை செயலாளர் செண்பகமூர்த்தி, அண்ணா தொழிற்சங்க நிர்வாகி மாரியப்பன், அண்ணா துப்புரவு தொழிலாளர் சங்க நிர்வாகி முருகன்,சிறுபான்மையோர் பிரிவு திவான்பாட்ஷா, அதிமுக நிர்வாகிகள் மாரிச்சாமி,போடுசாமி, செல்லையா, மாடசாமி, பாலமுருகன், கேபிள் குமார், பழனிக்குமார், சிங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY