பினராயி விஜயன்போல் நீங்கள் செயல்பட்டீர்களா?- எடப்பாடிக்கு ராமதாஸ் கேள்வி

8

கேரளாபோல் எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கவில்லை என முதல்வர் எடப்பாடி பேட்டி அளிக்க கேரள முதல்வர்போல் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக்கேட்டு செயல்பட்டீர்களா? என பாமக ராமதாஸ் பதில் கேள்வி கேட்டுள்ளார்.

நிவாரணப் பணிகளுக்கு  கேரளத்தைப் போன்று எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என முதல்வர் எடப்பாடி பேட்டி அளித்திருந்தார். கேரளா போன்று எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை புயல் நிவாரணப்பணிகளை எதிர்கட்சிகள் கொச்சைப்படுத்தக்கூடாது.

மழையால் திருவாரூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களை இன்று பார்வையிட முடியவில்லை. மீண்டும் அந்த பகுதிகளுக்கு பார்வையிட செல்வேன்.

புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை துல்லியமாக கணக்கிட்டு மத்திய அரசிடம் நிவாரண நிதி கேட்போம்.நாளை மறுநாள் பிரதமரை சந்தித்து நிதி கேட்க உள்ளேன் என இன்று பேட்டி அளித்தார்.

 

இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி பேட்டியைப்போட்டு கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.

நிவாரணப் பணிகளுக்கு  கேரளத்தைப் போன்று எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை முதல்வர் எடப்பாடி – கேரள முதலமைச்சர் 100 மணி நேரம் கழித்து தான் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றாரா? கேரள முதல்வரைப் போன்று நிவாரணப் பணிகள் குறித்து எதிர்க்கட்சிகளுடன் எடப்பாடி பேசினாரா? ஆலோசனைகளைப் பெற்றாரா?

கேரளத்தில் பினராயி விஜயன் அரசு வெள்ள நிவாரணப் பணிகளை செய்தது போல தமிழகத்தில் கஜா புயல் நிவாரணப் பணிகளை எடப்பாடி அரசு செய்ததா? கஜா புயலால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை 100 மணி நேரம் கழித்து முதலமைச்சர் பழனிச்சாமி பார்வையிடுகிறார்.

 

மக்களை ஒதுக்கி வைத்துவிட்டு ஆதரவாளர்கள் மட்டும் புடைசூழ வலம் வருகிறார். பாதிக்கப்பட்ட மக்கள் மீது என்னவொரு அக்கறை? இப்படிப்பட்ட முதலமைச்சரை பெற மக்கள் என்ன தவம் செய்திருக்க வேண்டும்?” என ட்விட்டரில் கிண்டலடித்துள்ளார்.

LEAVE A REPLY